தங்களது நிறுவன தடுப்பூசி டெல்டா வகை கொரோனாவையும் எதிர்க்கும் திறனுடையது: ஜான்சன் அண்ட் ஜான்சன் ஆய்வறிக்கை

டெல்லி: தங்களது நிறுவன தடுப்பூசி டெல்டா வகை கொரோனாவையும் எதிர்க்கும் திறனுடையது என ஜான்சன் அண்ட் ஜான்சன் அறிவித்துள்ளது. ஒரு டோஸ் தடுப்பூசியே வீரியத்துடன் செயல்படுவதாக தனது 8 மாத ஆய்வறிக்கையை அந்நிறுவனம் சமர்ப்பித்துள்ளது. அமெரிக்காவின் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் கொரோனா தடுப்பூசியை தயாரித்துள்ளது.

இந்த தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அனுமதி அளித்துள்ளன. ஒரு டோஸ் மட்டுமே போடக்கூடிய வகையிலான தடுப்பூசி இதுவாகும். ஜான்சன் அண்ட் ஜான்சன்  தடுப்பூசியை இந்தியாவுக்கு கொண்டு வருவது குறித்து மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசிக்கு இந்தியாவில் பரிசோதனை தேவையில்லை என்று மத்திய அரசு கூறியதாக அந்நிறுவனம் சமீபத்தில் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், வேகமாக பரவி வரும் டெல்டா வகை கொரோனா நோய்த்தொற்று மற்றும் சார்ஸ் வைரஸ் எனப்படும் தீவிர சுவாசக் கோளாறு நோய்களுக்கு எதிராக வீரியத்துடனும் மற்றும் நீடித்து செயல்படுவதை தரவுகள் நிரூபிப்பதாக  ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் தடுப்பூசி நோய் எதிர்ப்பு திறன் 8 மாதங்கள் வரை நீடிப்பதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: