மதுரை இதயம் அறக்கட்டளை காப்பகத்தில் குழந்தை கடத்தல் விவகாரம்.: 2 இடைத்தரகர்கள் உள்பட சம்பவத்தில் தொடர்புடையவர்கள் கைது

மதுரை: மதுரையில் உள்ள இதயம் அறக்கட்டளை காப்பகத்தில் குழந்தை கடத்தலில் ஈடுபட்ட  2 இடைத்தரகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இடைத்தரகர்களாக செயல்படாத செல்வி, ராஜா ஆகியோரை தல்லாகுளம் போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். மதுரை ஆயுதப்படை மைதானத்தில் இயங்கி வந்த இதயம் அறக்கட்டளை காப்பகத்தில் வசித்து வந்த ஐஸ்வர்யா என்ற பெண்ணின் ஒரு வயது ஆண் குழந்தை கொரோனாவால் உயிரிழந்ததாக கூறப்பட்டது.

ஆனால், அறக்கட்டளை ஊழியர்கள் அந்த குழந்தையை ரூ. 5 லட்சத்திற்கு விற்பனை செய்துவிட்டு குழந்தை உயிரிழந்ததாகக் கூறி நாடகமாடியது அம்பலமானது. இதே போல ஸ்ரீதேவி என்ற பெண்ணின் இரண்டு வயது பெண் குழந்தையும் அவர்கள் விற்பனை செய்துள்ளனர். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியது.

அதனை தொடர்ந்து போலீசார் இரண்டு குழந்தைகளையும் பத்திரமாக மீட்டனர். மேலும் இதயம் அறக்கட்டளையில் தங்கியிருந்த 82 சிறுவர்கள் முதல் அனைவரையும் மீட்ட போலீசார், 5 காப்பகங்களுக்கு அவர்களை மாற்றி அனுப்பிவைத்தனர்.  

இந்தநிலையில் குழந்தைகளை விற்ற இடைத்தரகர்களாக செயல்படாத செல்வி, ராஜா ஆகியோரை தல்லாகுளம் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் குழந்தையை விலைக்கு வாங்கிய நகைக்கடை அதிபர் கண்ணன், அவரது மனைவி பவானி கைது செய்யப்பட்டனர்.

மேலும் மற்றொரு குழந்தையை விலைக்கு வாங்கிய எவர்சில்வர் பட்டறை தொழிலாளி சாதிக், மனைவி ராணி கைது செய்யப்பட்டனர். இரு குழந்தைகளை விற்பனை செய்தது தொடர்பாக இதயம் அறக்கட்டளை நிர்வாகி கலைவாணியும் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: