மர்மங்களின் தேசமாக உள்ள வடகொரியாவில் கொரோனா உள்ளதா?: படபடத்த கிம் ஜாங்...நாட்டின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிய உயர் அதிகாரிகள் டிஸ்மிஸ்..!!

பியோங்யாங்: வடகொரியாவில் கொரோனாவே இல்லை என கூறி வந்த அதிபர் கிம் ஜாங் உன், நாட்டிற்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டதாக கோபமடைந்து உயர் அதிகாரிகளை பணிநீக்கம் செய்துள்ளார். கொரோனா எதிரொலியாக வடகொரியாவின் எல்லைகள் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மூடப்பட்டுள்ளன. இதனால் அந்த நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி உணவு பஞ்சம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. இதனிடையே நீண்ட காலமாக பொதுவெளியில் தோன்றாமல் இருந்த அதிபர் கிம் ஜாங் உன், இரண்டு நாட்களுக்கு முன் வெளி உலகில் தலைகாட்டினார். உடல் மெலிந்து பரிதாபமாக காட்சியளித்த அவரை கண்டு வடகொரிய மக்கள் வருந்தினர்.

இந்த நிலையில் கட்சியின் மூத்த நிர்வாகிகள், உயர் அதிகாரிகள் கூட்டத்தில் கிம் ஜாங் உன் காட்டமாக பேசியுள்ளார். கொரோனா தொற்றை சமாளிப்பதற்கான நடவடிக்கைகளை செயல்படுத்த தவறியதால் நாட்டிற்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் கூறி கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். நாடு மற்றும் மக்களின் பாதுகாப்பை அபாய நிலைக்கு கொண்டு சென்றதாக ஆளும் கட்சி அதிகாரிகளை அவர் நீக்கியாகவும் தகவல் வெளியாகியுள்ளது. வடகொரியாவில் கொரோனா பாதிப்பு உள்ளதா? அல்லது எல்லைகள் மூடப்பட்டதால் ஏற்பட்ட விளைவுகளை பற்றி அதிபர் பேசினாரா என தெளிவான தகவல் வெளியாகவில்லை.

Related Stories: