குழு காப்பீட்டு துறையில் இணையவழி சேவைகளுக்கு புதிய மென்பொருள் தளம்: எல்ஐசி துவக்கியது

மும்பை: எல்ஐசி யின் குழு காப்பீட்டுத்துறை, மையப்படுத்தப்பட்ட இணைய வழி மூலம் பணியை மேற்கொள் புதிய மென்பொருள் தளத்தை தொடங்கியுள்ளது. மும்பையிலுள்ள மத்திய அலுவலகமான யோகக்க்ஷேமா-வில் எல்ஐசி சேர்மன் எம்.ஆர்.குமார் இந்த இ-பிஜிஎஸ் திட்டத்தை துவக்கி வைத்தார். இதில் எல்ஐசி மேலாண்மை இயக்குநர்கள் விபின் ஆனந்த், முகேஷ் குப்தா, ராஜ்குமார் மற்றும் மொஹன்தி, எல்ஐசி குழு காப்பீட்டுக்கான நிர்வாக இயக்குநர் கே.எஸ்.நாங்நயால் ஆகியோர் பங்கேற்றனர். இந்த புதிய தகவல் தொழில்நுட்ப தளத்திலிருந்து முதல் டிஜிட்டல் ரசீதை ஐடிபிஐ வங்கி மேலாண்மை இயக்குநர் மற்றும் சிஇஓ ராகேஷ் ஷர்மா பெற்றுக்கொண்டார்.

டெக் மகிந்திராவின் இந்தியாவுக்கான தலைவர் சுஜித் பக்ஷி, ஐசிஐசிஐ வங்கி செயல் இயக்குநர் விஷாகா லிமாயே மற்றும் அந்த நிறுவனங்களை சேர்ந்தவர்கள் விழாவில் பங்கேற்றனர். மேலும், காணொலி காட்சி மூலம், நாடு முழுவதும் உள்ள லெ்ஐசி மண்டல, மத்திய அலுவலக, பிராந்திய அதிகாரிகள் உட்பட அனைவரும் பங்கேற்றனர்.  இந்த தொழில்நுட்ப தளமானது பண பரிமாற்றத்திற்கு வகை செய்வதுடன், அதனை சரியாக வரவு வைக்கவும் வங்கிகளுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

மேலும், தடையற்ற பண பரிவர்த்தனை, பல புதுமையான சேவைகளும் இதில் உள்ளன. குழு காப்பீட்டு வாடிக்கையாளர்கள் கஸ்டமர் போர்ட்டல் மூலம் தாமாகவே சுயசேவையாக பெறுவதற்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.  இந்த விழாவில் எல்.ஐ.சி யின் மேலாண்மை இயக்குனர் திரு விபின் ஆனந்த் அவர்கள் பேசிய போது, இந்தப்புதிய கணினி செயல்பாடு கார்போரேட் நிறுவன குழுக்காப்பீட்டு வாடிக்கையாளர்களின் தொழில் நுட்பம் சார்ந்த எதிர்பார்ப்புகளை சிறந்த வகையில் நிறைவு செய்யும் என்றார்.

Related Stories: