திருவில்லிபுத்தூர் அருகே 8 மாதங்களாக நிரம்பி வழியும் பாசன கிணறுகள்: விவசாயிகள் மகிழ்ச்சி

திருவில்லிபுத்தூர்: திருவில்லிபுத்தூர் அருகே கடந்த 8 மாதங்களாக பாசன கிணறுகளில் தண்ணீர் நிரம்பி வழிகிறது. இதனால் விவசாய பணிகள் தீவிரமடைந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகே மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ளது மம்சாபுரம். மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக, மம்சாபுரம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் உள்ள குளங்கள், கண்மாய்கள் உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு கடந்த 8 மாதங்களாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

தொடர் நீர்வரத்து காரணமாக மம்சாபுரம் வாழைக்குளம் கண்மாய் ஐந்து முறை நிரம்பியது. இதனால் இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளதால், பாசன கிணறுகளில் தண்ணீர் நிரம்பி வழிகிறது. 8 மாதமாக பாசன கிணறுகளில் தண்ணீர் நிரம்பி காணப்படுவதால், இப்பகுதியில் விவசாய பணிகள் தீவிரமடைந்துள்ளன. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Related Stories: