கொரோனா ‘நெகடிவ்’ ரிசல்ட் வந்தும் திரிணாமுல் எம்எல்ஏ மரணம்

கொல்கத்தா: கொரோனா நெகடிவ் ரிசல்ட் வந்த நிலையில், திரிணாமுல் எம்எல்ஏ நேற்றிரவு கொல்கத்தா மருத்துவமனையில் மூச்சுத்திணறால் இறந்தார்.  மேற்குவங்க மாநிலம் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ ஜெயந்த நாஸ்கர் (73) என்பவருக்கு கடந்த மே மாதம் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால், கொல்கத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரது உடலில் முன்னேற்றம் ஏற்பட்டது. அதன்பின் எடுக்கப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா ‘நெகடிவ்’ என்று வந்தது. இருந்தும், அவர் தொடர்ந்து மருத்துவமனையின் கண்காணிப்பில் இருந்தார். இந்நிலையில், நேற்றிரவு திடீர் மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இவரது மறைவுக்கு மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி வெளியிட்ட இரங்கல் செய்தியில், ‘ஜெயந்த நாஸ்கரின் குடும்பத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும் எனது இரங்கல். கோசாபாவிலிருந்து 3 முறை எம்எல்ஏவாக தேர்வான அவர், தனது தொகுதி வாழ்க்கையை மேம்படுத்த பல சேவைகளை செய்துள்ளார். எங்களின் பல போராட்டங்களில் அவரின் பங்களிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை’ என்று, அதில் அறிக்கையில் நினைவு கூர்ந்துள்ளார்.

Related Stories: