நாகையில் அர்ச்சகர்கள் - பூசாரிகளுக்கு கொரோனா நிவாரண நிதி விநியோகம்!: எம்.எல்.ஏக்கள் ஆளூர் ஷாநவாஸ், நாகை மாலி பயனாளிகளுக்கு வழங்கினர்..!!

நாகை: இந்து அறநிலையத்துறை சார்பில் கோவில் அர்ச்சகர்கள், பூசாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு 4 ஆயிரம் ரூபாய் நிவாரணம் மற்றும் உதவி பொருட்கள் வழங்கப்பட்டன. நாகையில் கலைஞர் பிறந்தநாள் விழாவை ஒட்டி இந்து அறநிலையத்துறை சார்பில் 218 கோவில் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு கொரோனா நிவாரண நிதி மற்றும் மளிகை பொருட்கள் விநியோகிக்கப்பட்டன. 

நீலாயுத்தாட்சியம்மன் கோவிலில் நாகை  எம்.எல்.ஏ. ஆளூர் ஷாநவாஸ், கீழ்வேளூர் எம்.எல்.ஏ. நாகை மாலி ஆகியோர் பயனாளிகளுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினர். திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் கோயில் அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 4 ஆயிரம் ரூபாய் நிவாரண நிதி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கும் விழா நடைபெற்றது. 

132 பயனாளிகளுக்கு செய்தித்துறை அமைச்சர் சுவாமிநாதன், ஈரோடு எம்.பி. கணேச மூர்த்தி ஆகியோர் நிவாரணம் மற்றும் உதவி பொருட்களை வழங்கினர். விழுப்புர மாவட்டம் மரக்காணத்தில் கொரோனா முன்களப் பணியாளர்களுக்கு முன்னாள் அரசுப்பள்ளி மாணவர்கள் இணைந்து நிவாரணப் பொருட்கள் வழங்கினர். 

மரக்காணம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 1992ம் ஆண்டு பள்ளிப் படிப்பை முடித்த மாணவர்கள் காய்கறி, அரசி உள்ளிட்ட மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பை 100 பேருக்கு நிவாரணமாக அளித்தனர். தண்டையார்பேட்டை சுந்தரம்பிள்ளை நகர் குடியிருப்போர் முன்னேற்ற சங்கம் சார்பில் முன்களப் பணியாளர்களுக்கு தலா 10 கிலோ அரசி மற்றும் மளிகைப் பொருட்களை அளித்தனர். 

திருப்பதி திருமலா தேவஸ்தான தலைவர் வெங்கடேசன் உள்ளிட்டோர் இதனை வழங்கினார். இதேபோல சிவகாசி சாட்சியாபுரம் மனவளர்ச்சி குன்றிய, வாய் பேசாத, காத்து கேளாதோர் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு இளம் தொழில் முனைவோர் நிவாரண பொருட்களை வழங்கினர். 

Related Stories:

>