குருவாயூர், கோவை எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்: தெற்கு ரயில்வே தகவல்

நாகர்கோவில்: தெற்கு ரயில்வே திருவனந்தபுரம் கோட்ட செய்திகுறிப்பு: ரயில் எண் 06321 நாகர்கோவில் - கோயம்புத்தூர் தினசரி சிறப்பு ரயில், 06322 கோயம்புத்தூர்-நாகர்கோவில் சிறப்பு ரயில், 02627 திருச்சி-திருவனந்தபுரம் சென்ட்ரல் சிறப்பு ரயில், 02628 திருவனந்தபுரம் சென்ட்ரல்-திருச்சி ஜங்ஷன் சிறப்பு ரயில், ரயில் எண் 06605 மங்களூர் ஜங்ஷன்-நாகர்கோவில் ஜங்ஷன் சிறப்பு ரயில், ரயில் எண் 06606 நாகர்கோவில் ஜங்ஷன் -மங்களூர் ஜங்ஷன் சிறப்பு ரயில் ஆகிய இன்று முதல் இயக்கம் தொடங்குகிறது.

ரயில் எண் 06127 சென்னை எழும்பூர்-குருவாயூர் சிறப்பு ரயில் இன்று முதல் குருவாயூர் வரை வழக்கம்போல் இயக்கப்படும். மறுமார்க்கத்தில் இந்த ரயில் ( 06128) நாளை முதல் குருவாயூரில் இருந்து சென்னை வரை வழக்கம்போல் இயக்கப்படும். இவ்வாறு செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>