கார் விபத்தில் 2 பாதிரியார்கள் பலி

ஆம்பூர்: பெங்களூரூவை சேர்ந்தவர்கள் சாந்தன்(60), தாவீத்(60), விக்டர்மோகன்(65). இவர்கள் மூவரும் பாதிரியார்கள். இவர்களது நண்பர் சென்னையில் பாதிரியாராக உள்ளார். அவர் உடல் நலக்குறைவால் நேற்று முன்தினம் காலமானார். இதையொட்டி சாந்தன் உள்ளிட்ட மூவரும் இறுதிச்சடங்கில் பங்கேற்க நேற்று முன்தினம் சென்னைக்கு காரில் சென்றனர். அங்கு இறுதிச்சடங்கு முடிந்ததும் நேற்று முன்தினம் இரவு பெங்களூரூ புறப்பட்டனர். ஆம்பூர் வெங்கிளி தேசிய நெடுஞ்சாலை வழியாக நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியளவில் கார் சென்றுகொண்டிருந்தது. அப்போது திடீரென கார் நிலைதடுமாறி சாலையோர தடுப்பு கம்பிகள் மீது மோதி பக்கவாட்டில் உள்ள புதருக்குள் கவிழ்ந்தது. இந்த விபத்தில் தாவீத், விக்டர்மோகன் ஆகியோர் பரிதாபமாக இறந்தனர்.

Related Stories:

>