தொற்று பரவும் வாய்ப்பு; நெல்லையில் காய்கனி சந்தையில் சமூக இடைவெளியின்றி திரளும் மக்கள்

நெல்லை: நெல்லையில் மொத்த காய்கனி விற்பனை சந்தையில் அதிகாலையில் சமூக இடைவெளியின்றி வியாபாரிகள், மக்கள் கூடுகின்றனர். இதனால் ெதாற்று பரவும் அபாயம் இருப்பதால் சுகாதார துறையினர் ஆய்வு செய்ய வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். நெல்லை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டுவரும் தொடர் நடவடிக்கைகளால் கொரோனா தொற்று பரவல் வேகமாக குறைந்து வருகிறது. அதே நேரத்தில் பொறுப்பின்றி ஊர் சுற்றுபவர்கள் பொது இடங்களில் முககவசம் சரியாக அணியாமல் செல்பவர்களால் பரவல் அபாயம் உள்ளது.

இந்த நிலையில் நெல்லை டவுன் நயினார் குளம் அருகே  மொத்த காய்கனி விற்பனை சந்தையில் செயல்பட்ட குறிப்பிட்ட எண்ணிக்கையிலான கடைகள் சாப்டர் பள்ளி வளாகத்திற்கு மாற்றப்பட்டன. இங்கு மொத்த மற்றும் சில்லரை விற்பனை நடைபெறுகிறது. இதற்காக சிறு வியாபாரிகள் அதிகளவில் நள்ளிரவு முதல் அதிகாலை வரை வருகின்றனர். உள்ளே  வருபவர்கள் சமூகஇடைவெளியின்றி நெருக்கமாக நின்று காய்கனிகளை வாங்கின்றனர். இவர்களில் பலரது முகங்களில் முகக்கவசம் சரியாக அணிவதில்லை. பெயரளில் கழுத்திலும் வாயிலும் முகவசத்தை மாட்டிக்கொண்டு வருகின்றனர்.

இதனால் அவர்களில் யாராவது ஒருவருக்கு கொரோனா பாசிட்டிவ் அறிகுறி இருந்தால் மற்றவர்களுக்கும் பரவும் அபாயம் உள்ளது. எனவே இந்த பகுதியில் சுகாதார துறையினர் ஆய்வு செய்து கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories:

>