இந்திய விமானப்படையின் மிக்-21 விமானம் விபத்து: விமானப்படை விமானி மரணம்

டெல்லி: இந்திய விமானப்படையின் (ஐஏஎப்) மிக்-21 ரக போர் விமானம் ஒன்று பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மோகா அருகே நேற்றிரவு விபத்துக்குள்ளானது. வழக்கமான பயிற்சியில் ஈடுபட்ட போது விமானம் விபத்தில் சிக்கியதால், விமானி ஒருவர் இறந்தார். இந்திய விமானப்படை அதிகாரிகள் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுதொடர்பாக இந்திய விமானப்படை வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘இந்திய விமானப்படையின் பைசன் விமானம் ஒன்று நேற்று இரவு விபத்தில் சிக்கியது. விமானி எஸ்.என் – எல்.டி.ஆர் அபினவ் சவுத்ரி, இந்த விபத்தில் உயிரிழந்தார். இந்திய விமானப்படை, இந்த துயரமான சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறது. மேலும், அபினவ் சவுத்ரியை இழந்த அவரது குடும்பத்தினருக்கு இந்திய விமானப்படை உறுதி துணையாக இருக்கும்’ என்று தெரிவித்துள்ளது….

The post இந்திய விமானப்படையின் மிக்-21 விமானம் விபத்து: விமானப்படை விமானி மரணம் appeared first on Dinakaran.

Related Stories: