நான் பாக். பிரதமரை சந்திக்க செல்லவில்லை: உத்தவ் தாக்கரே அதிரடி பதில்

புதுடெல்லி :  மகாராஷ்டிராவில் கடந்த 2019ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் அதிகார பகிர்வில் உடன்பாடு ஏற்படாததால் பாஜ- சிவசேனா கூட்டணி முறிந்தது. இந்நிலையில்,  மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே நேற்று டெல்லியில் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். துணை முதல்வர் அஜித் பவார், காங்கிரஸ் கட்சியை சேரந்த அசோக் சவான் ஆகியோர் உடன் சென்றனர். சுமார் 90 நிமிடங்கள் இந்த சந்திப்பு நிகழ்ந்தது. இதில், தனது மாநிலத்தில் நிலவும் பிரச்னைகள் குறித்து அவர்கள் பிரதமர் மோடியுடன் விவாதித்தனர்.முன்னதாக, பிரதமர் மோடி உடனான சந்திப்பு குறித்து  உத்தவ் தாக்கரேவிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியபோது, ‘‘பிரதமர் மோடியை சந்தித்ததில் எந்த தவறும் இல்லை. நான் ஒன்றும் பாகிஸ்தான் பிரதமரை சந்திக்க செல்லவில்லை. சிவசேனா - பாஜ உறவு பிரிந்திருக்கலாம். ஆனால், எங்கள் உறவு இன்னும் முடிவுக்கு வரவில்லை,” என்றார்.

Related Stories: