அனைத்து நுழைவு தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டும் ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை:  பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: இந்தியா முழுவதும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டிருக்கும் நிலையில், மருத்துவம், தொழில்நுட்ப படிப்புகளுக்கான நுழைவு தேர்வுகளை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு நிறுவனங்கள் தீவிரமாக மேற்கொண்டு  வருகின்றன. 12ம் வகுப்பு பொது தேர்வுகளை நடத்துவதற்கு சாதகமான சூழல் இல்லாத  நிலையில், நுழைவு தேர்வுகளை மட்டும் நடத்த முற்படுவது ஏற்க முடியாதது. மாணவர்களின் உயிரே முக்கியம். எனவே, நீட் தேர்வு உள்ளிட்ட அனைத்து நுழைவு தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டும். மாணவர்களுக்கு சம்பந்தப்பட்ட தேர்வு வாரியங்கள் வழங்கியுள்ள மதிப்பெண்களின் அடிப்படையில் கலை மற்றும் அறிவியல், மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட அனைத்து படிப்புகளுக்கும் மாணவர் சேர்க்கை நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.

Related Stories: