மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் 43,000 கோடியில் 6 நீர்மூழ்கி கப்பல்: பாதுகாப்பு அமைச்சகம் அனுமதி

புதுடெல்லி: இந்தியா-சீனா இடையே சமீப காலமாக பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், பாதுகாப்பை பலப்படுத்தும் பணியில் இருநாடுகளும் தீவிரமாக உள்ளது. சீனாவின் வளர்ந்து வரும் கடற்படை வலிமை சமாளிக்க, இந்திய கடற்படையை பலப்படுத்த பாதுகாப்பு அமைச்சகம் முடிவு செய்துள்ளது. அதன்படி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் கூட்டம் நேற்று நடந்தது. இதில், மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் கடற்படைக்கு புதிதாக 43 ஆயிரம்  கோடியில் 6 நீர்மூழ்கிக் கப்பல்களை தயாரிக்கும் திட்டத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது. இந்த திட்டத்திற்கு ‘பி-75 இந்தியா’ என பெயரிடப்பட்டுள்ளது. உள்நாடு, வெளிநாடு தொழில்நுட்பத்தில் இவை கட்டப்பட உள்ளது. இந்த கப்பல்களை கட்டும் பணியை 12 ஆண்டுகளில் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

Related Stories: