நான் நிச்சயமாக வருவேன்...‘கட்சியை என்றைக்கும் அப்படி எல்லாம் விடமாட்டேன்’: அதிமுக மாணவரணி நிர்வாகியுடன் சசிகலா பேசிய ஆடியோவால் பரபரப்பு

நெல்லை: கடந்த சில நாட்களாக சசிகலா, தனது ஆதரவாளர்களுடன் தொலைபேசி வாயிலாக பேசியதாக அடுத்தடுத்து ஆடியோ வெளியாகி வருகிறது. இந்த நிலையில், நேற்று நெல்லை தச்சநல்லூர் பகுதி அதிமுக மாணவரணி இணை செயலாளர் சுந்தர்ராஜ் என்பவருடன் சசிகலா பேசிய தொலைபேசி உரையாடல்  வெளியாகியது. அந்த உரையாடல் வருமாறு:

ஆதரவாளர் சுந்தர்ராஜ்: நீங்க இல்லாமல் ஒன்றரை கோடி தொண்டர்களும் கலங்கி விட்டோம். நீங்கள் கண்டிப்பாக வர வேண்டும்.

சசிகலா: நான் நிச்சயமாக  வந்துருவேன். கவலைப்படாதீர்கள். என்றைக்கும் நான் அப்படி எல்லாம்  விடமாட்டேன். நிச்சயமாக தலைவர், அம்மா எப்படி வைத்திருந்தார்களோ... அந்த  மாதிரி நான் கட்சியை கொண்டு வருவேன். கவலைப்படாதீங்க, விரைவில்  வந்துவிடுவேன்.

ஆதரவாளர்: நீங்க வரும் நாளைதான் எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.

சசிகலா: நிச்சயமாக, கொரோனா பாதிப்பு குறைந்தவுடன் வந்துவிடுவேன்.

ஆதரவாளர்: நீங்கள் தேர்தலையொட்டி வெளியே போனதும் எங்களுக்கு கையும், காலும் ஓடவில்லை.

சசிகலா: ஒண்ணும் கவலைப்படாதீங்க. கொரோனா தாக்கம் குறைந்தவுடன் நான் அங்கு வந்துவிடுவேன்.

ஆதரவாளர்: அம்மாவுக்கு ஒரு விண்ணப்பம். உங்களை நேரில் சந்திக்க வேண்டும்.

சசிகலா: நிச்சயமாக நான் எல்லோரையும் நேரில் பார்க்கிறேன். கொரோனா லாக் டவுன் முடிந்த பிறகு உங்களை நிச்சயமாக கூப்பிட்டு பார்க்கிறேன்.

ஆதரவாளர்: வணக்கம் அம்மா, வணக்கம் அம்மா. இவ்வாறு தொலைபேசி உரையாடல் இருந்தது. சசிகலாவின் இந்த புதிய ஆடியோ, நேற்று நெல்லை மாவட்டம் முழுவதும் சமூக வலைதளங்களில் வைரலானது, அதிமுகவினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏற்கனவே, வெளியான சசிகலா உரையாடல்  குறித்து கருத்து தெரிவித்த அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி  எம்எல்ஏ, சசிகலா பேசியது அமமுகவினருடன்தான். அதிமுகவினருடன் இல்லை என  கூறியிருந்தனர். நேற்று 9 மாவட்ட செயலாளர்களுடன் தனியாக ஆலோசனை நடத்திய  அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி  பழனிசாமியும் சசிகலா பேசியது அதிமுகவினருடன் இல்லை, தான் அரசியலில் இல்லை என அவரே கூறியிருக்கிறார். எனவே ஆடியோ விவகாரத்தை பொருட்படுத்த வேண்டியதில்லை என கூறினார்.இந்த  நிலையில்தான், நெல்லையை சேர்ந்த அதிமுக நிர்வாகியுடன் பேசியதாக சசிகலாவின் புதிய ஆடியோ வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: