டெல்லியில் இருந்து டொமினிகாவுக்கு சென்ற தனிவிமானம் வைரவியாபாரி மெகுல்சோக்சி இந்தியாவுக்கு நாடு கடத்தலா?

புதுடெல்லி:  பஞ்சாப் நேஷனல் வங்கியில் போலி ஆவணங்களை பயன்படுத்தி வைரவியாபாரி மெகுல் சோக்சி ரூ.13,500 கோடி கடன்பெற்று திருப்பி செலுத்தாமல்  மோசடி செய்தார். இந்தியாவில் இருந்து மெகுல்சோக்சி கியூபா தப்பி சென்றார்.  இந்திய போலீசார் அவரை தேடி வந்தனர்.  2018ம் ஆண்டு முதல் மேற்கிந்திய தீவு நாடான ஆன்டிகுவாவில் குடியுரிமை பெற்று மெகுல் சோக்சி அங்கு வசித்து வந்தது தெரியவந்தது. இந்நிலையில் கடந்த செவ்வாயன்று  ஆண்டிகுவா மற்றும் பார்புடாவில் இருந்து அவர் மாயமானார். செவ்வாயன்று இரவு  டொமினிகா நாட்டின் டவ்காரி கடற்கரையில் மெகுல் சோக்சி கைது செய்யப்பட்டார். மெகுல் சோக்சியின் வழக்கறிஞர்கள் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தனர்.

சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைந்ததாக மெகுல் சோக்சி  கைது செய்யப்பட்டுள்ள நிலையில் நாடு கடத்தலுக்கு  இடைக்கால தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.,  சோக்சி  வழக்கறிஞர்கள் தாக்கல் செய்துள்ள ஆட்கொணர்வு மனுவை நீதிமன்றம் நாளை மறுநாள் விசாரிக்கின்றது. அப்போது அவரது  தடுப்பு காவல்  நீட்டிப்பு குறித்து தீர்மானிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தனிவிமானம்: இந்நிலையில் கத்தார் விமான நிறுவனத்தின் பாம்பார்டியர்  குளோபல் 5000 என்ற விமானம் டொமினிகாவில் உள்ள டக்ளஸ் விமான நிலையத்தில்  28ம் தேதி தரையிறங்கி உள்ளது. முன்னதாக இந்த விமானம் தோஹாவில் இருந்து  27ம் தேதி டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியதாக நம்பதகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.  

எனவே டெல்லியில்  இருந்து யாரோ டொமினிகோவிற்கு சென்றுள்ளார்கள் அல்லது அங்கிருந்து சோக்சியை  நாடு கடத்தி இந்தியா அழைத்து வருவதற்கு விமானம் அனுப்பப்பட்டதா என்ற  சந்தேகம் எழுந்துள்ளது. இந்நிலையில் சிறையில் கண்கள் சிவந்த நிலையில், கையில் காயங்களுடன் மெகுல் சோக்சி இருக்கும் புகைப்படத்தை உள்ளூர் ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

Related Stories: