அரியானாவில் கருப்பு பூஞ்சைக்கு 50 பேர் பலி

சண்டிகர்: அரியானாவில் கடந்த 2 வாரங்களாக கறுப்பு பூஞ்சை தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் அறிவிக்க வேண்டிய  நோயாக மாநில அரசு சமீபத்தில் அறிவித்தது. நோயாளியின் விவரங்களை மாவட்ட நிர்வாகத்துக்கு தெரிவிக்க வேண்டும் எனவும் மருத்துவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நேற்று காணொலி வாயிலாக செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. மாநில முதல்வர் மனோகர்லால் கட்டார்  செய்தியாளர்களிடம் கூறியதாவது:  

‘அரியானாவில் மொத்தம் 750 பேர் கறுப்பு பூஞ்சை தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இவர்களில் 58 பேர் குணமடைந்துள்ளனர். 650க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

50 பேர் கறுப்பு பூஞ்சைக்கு பலியாகியுள்ளனர்.  கறுப்பு பூஞ்சைக்கான ஊசிகளை ஏற்கனவே போதுமான அளவுக்கு கொள்முதல் செய்துள்ளோம். 6 ஆயிரம் ஊசிகள் அரசு மருத்துவனனைகளில் உள்ளன. அடுத்த 2 தினங்களில் இன்னும் 2 ஆயிரம் ஊசிகள் வரவுள்ளது. மேலும் 5 ஆயிரம் ஊசிகளை ஆர்டர் செய்துள்ளோம்’ என்று கூறியுள்ளார். சுகாதாரத்துறை அமைச்சர் இதுபற்றி கூறுகையில், ‘மருத்துவமனைகளில் கறுப்பு பூஞ்சை சிகிச்சை அளிப்பதற்கான படுக்கை வசதிகளை அதிகரித்துள்ளோம். சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்கு எந்த தாமதமும் இல்லாமல் சிகிச்சை வழங்க அரசு தயாராக உள்ளது. கறுப்பு பூஞ்சை சிகிச்சைக்குத் தேவையான அம்போடெரிசின்  பி ஊசிகள் 12 ஆயிரம் வழங்குமாறு மத்திய அரசை கேட்டு கொண்டுள்ளோம்’ என்று கூறியுள்ளார்.

Related Stories: