சீனாவில் புதிதாக 20 பேருக்கு கொரோனா தொற்று உடனடி ஊரடங்கு

பீஜிங்:  கொரோனாவின் ஆரம்பமே சீனாதான். ஆனால் அங்கு மட்டும் 2வது, 3வது என எந்த அலையும் வரவில்லை. ஏன் சீனாவில் மட்டும் 2வது அலை ஏற்படவில்லை என்பதற்கு காரணம் உண்டு. கொரோனா விஷயத்தில் சீனா ரொம்பவே உஷாராக உள்ளது. அங்குள்ள குவாங்சோ நகரில் கடந்த ஒரு வாரத்தில் 20 பேர் புதிதாக வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதில் சிலருக்கு இந்திய வகை கொரோனா கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது. எனவே உடனடியாக அந்நகரத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தொற்று கண்டறியப்பட்ட 5 தெருக்களில் இருப்பவர்கள் யாரும் வீட்டை விட்டு யாரும் வெளியே வரக்கூடாது என கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.பொது இடங்கள் மூடப்பட்டு உள்ளன. நகரில் உள்ள 1.5 கோடி பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories: