கரூர் பஸ் நிலையத்தில் செயல்பட்டு வந்த மொத்த காய்கறி விற்பனை சந்தை 2 இடத்திற்கு மாற்றம்

கரூர் : கரூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது.

கொரோனா நோய் பரவலை தடுக்கும் வகையில் கரூர் பஸ் நிலையத்தில் செயல்பட்டு வந்த மொத்த காய்கறி விற்பனை சந்தை நேற்று முதல் சேலம் தேசிய புறவழிச்சாலையில் உள்ள தனியார் கலை கல்லூரி விளையாட்டு அரங்கம் மற்றும் கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானம் ஆகிய இடங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தினமும் மாலை 5 மணி முதல் 9 மணி வரை இந்த காய்கறி விற்பனை நடைபெறும்.

கரூர் நகராட்சியில் வார்டு 1 முதல் 28 வரையில் உள்ள வார்டுகளில் தள்ளுவண்டிகள் மற்றும் வாகனங்கள் மூலம் வியாபாரம் செய்யும் சில்லரை விற்பனையாளர்கள் சேலம் தேசிய புறவழிச்சாலையி உள்ள தனியார் கல்லூரி அரங்கிலும், 29 முதல் 48 வரையுள்ள வார்டுகளில் தள்ளுவண்டிகள் மற்றும் வாகனங்கள் மூலம் வியாபாரம் செய்யும் சில்லரை விற்பனை விற்பனையாளர்கள் மாவட்ட விளையாட்டு மைதானத்திலும், காய்கறிகளை கொள்முதல் செய்து கொள்ள மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

எனவே, அனைத்து தரப்பினர்களும் இதனை பின்பற்றி நடக்க வேண்டும். அரசால் எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்ற வகையில் கரூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் போர்க்கால அடிப்படையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

Related Stories: