இந்தியாவில் பைசர் தடுப்பூசி விரைவில் வர வாய்ப்பு

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்க கோவாக்சின், கோவிஷீல்டு ஆகியவை பயன்பாட்டில் உள்ளன. இந்நிலையில், வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளை இந்தியாவில் இறக்குமதி செய்ய பேச்சுவார்த்தைகள் நடத்தப்படுகின்றன. அதன்படி, அமெரிக்க நாட்டு நிறுவனங்களான மாடர்னா, பைசர் தடுப்பூசியை இந்தியாவில் பயன்பாட்டிற்கு கொண்டு வர பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. குறிப்பாக, மாடர்னா தடுப்பூசி உற்பத்தி செய்ய சிப்லா நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. மாடர்னா தடுப்பூசி 5 கோடி டோஸை உற்பத்தி செய்ய சிப்லா நிறுவனம் மத்திய அரசிடம் ஏற்கனவே அனுமதி கேட்டுள்ளது.

இந்நிலையில், மத்திய வெளியுறவு, சுகாதாரம், சட்டம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில், மாடர்னா தடுப்பூசி 2022ம் ஆண்டுதான் இந்தியாவில் அறிமுகம் செய்ய முடியும் என கூறப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பைசர் தடுப்பூசி 5 கோடி டோஸை இந்த ஆண்டே தர தயார் நிலையில் இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் 1 கோடி டோஸ், செப்டம்பரில் 2 கோடி டோஸ், அக்டோபரில் ஒ கோடி டோஸ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: