தேனி மந்தைகுளம் கண்மாயில் கழிவுகளை அகற்றும் பணியில் விவசாயிகள்

தேனி: தேனி-அல்லிநகரம் மந்தைகுளம் கண்மாயில் கழிவுகளை அகற்றும் பணியில் அல்லிநகரம் கிராமக்கமிட்டி மற்றும் விவசாய சங்கத்தினர் ஈடுபட்டுள்ளனர். தேனி-அல்லிநகரத்தில் குடியிருப்பு பகுதிகளுக்கு மத்தியில் மந்தைகுளம் கண்மாய் உள்ளது. இந்த கண்மாய்க்குள் ஆகாய தாமரை அதிகளவில் முளைத்துள்ளதாலும், நகராட்சி கழிவுநீர் கலந்துள்ளதாலும் தண்ணீர் முழுமையாக மாசடைந்துள்ளது. 10 ஆண்டுகளாக கண்மாய்நீர் மறுகால் ஓடைமூலம் வெளியேறாமல் இருந்தது. மேலும், நகராட்சி கழிவுநீர் கண்மாய்க்குள் கலந்து வருவதால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இந்நிலையில் தற்போது பெய்த கோடைமழை காரணமாக, 10 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த கண்மாய் முழுமையாக நிரம்பியது.

இக்கண்மாய் முழுமையாக மாசடைந்துள்ளதால் நிலத்தடி நீரும் மாசுபடும் அவலம் நிலை உள்ளது. இந்நிலையில், அல்லிநகரம் கிராமக் கமிட்டி செயலாளர் தாமோதரன். மந்தைகுளம் கண்மாய் விவசாய சங்க தலைவர் செல்வராஜ், செயலாளர் ராஜகுருபாண்டியன், பொருளாளர் அய்யலூ ஆகியோர் ஏற்பாட்டில் மந்தைகுளம் கண்மாயில் தேங்கியுள்ள கழிவுகளையும், ஆகாயத்தாமரை செடிகளையும் அகற்ற முடிவு செய்யப்பட்டது. இதன்படி இக்குழுவினர் ஏற்பாட்டின்பேரில் பரிசலில் சென்று, ஆகாயத்தாமரை செடிகள் மற்றும் கழிவு பொருட்களை அப்புறப்படுத்தும் பணியில் விவசாயிகள் மற்றும் கிராம கமிட்டியினர் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: