கொரோனா பரவிவரும் நிலையில் ஊரடங்கு மீறி ஜாத்திரை விழா: நோய் தொற்று பரவும் ஆபத்து

பள்ளிப்பட்டு: தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்துவருகிறது. நோய் தொற்றை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே கீச்சலம் கிராமத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி நேற்று முதல் 2 நாட்கள் ஜாத்திரை விழா நடத்தப்பட்டது. இதில் புது கீச்சலம் பகுதியை சேர்ந்த 140க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கலந்துகொண்டனர். கிராமத்துக்கு அருகில் உள்ள அம்மன் கோயிலில் பொங்கல் வைத்து அனைவரும் குடும்பத்துடன் பூஜைகள் செய்தனர்.

பின்னர் அங்கிருந்து மேள, தாளங்கள் முழங்க ஊர்வலமாக  கோயிலுக்கு சென்று அம்மனுக்கு படையல்வைத்து வழிபட்டனர்கொரோனா தொற்று வேகமாக பரவிவரும் நிலையில், ஊரடங்கு உத்தரவை மீறி ஜாத்திரை திருவிழா நடத்தப்பட்டுள்ளதால் இதன்மூலம் நோய் தொற்று பரவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: