இந்தியா மத்திய அரசின் புதிய விதிகளுக்கு கட்டுப்படவில்லை!: ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கு நாளை முதல் தடை? May 25, 2021 அரசு முகநூல் ட்விட்டர் டெல்லி; மத்திய அரசின் புதிய சமூக வலைதள விதிகளுக்கு கட்டுப்படாமல் இருக்கும் ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களுக்கு நாளை முதல் தடை விதிக்கப்படுமா என கேள்வி எழுந்துள்ளது. ஃபேஸ்புக், வாட்ஸ் அப், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் நாட்டின் பாதுகாப்புக்கும், இறையாண்மைக்கும் எதிராக தகவல்கள் பகிரப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதனையடுத்து ஓ.டி.டி. தளங்கள் உட்பட அனைத்து சமூக ஊடகங்களையும் கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த பிப்ரவரியில் ஒழுங்குமுறை விதிகளை மத்திய அரசு வெளியிட்டது. விதிகளை அமல்படுத்துவதற்கான காலக்கெடு இன்றுடன் நிறைவடைகிறது. ஆனால் விதிகளை அமல்படுத்த ஃபேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் உள்ளிட்ட நிறுவனங்கள் 6 மாதம் அவகாசம் கேட்டிருந்த நிலையில், அமெரிக்காவில் உள்ள தலைமை நிறுவனங்களிடம் இருந்து இன்னும் எந்த அறிவுறுத்தல்களும் வழங்கப்படவில்லை என தெரிகிறது. இதனால் புதிய விதிகளுக்கு இணங்காத அனைத்து சமூக ஊடகங்களுக்கும் தடை விதிப்பது மட்டுமின்றி குற்றவியல் நடவடிக்கையும் எடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவை சேர்ந்த கூ ஆப் மற்றும் புதிய சமூக ஊடக வழிகாட்டுதல்களுக்கு இணங்குவதாக தெரிவித்துள்ளது.
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு: சந்திரசேகர ராவின் மகள் கவிதாவுக்கு ஜாமீன் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு
மணல் குவாரி வழக்கில் தேவையில்லாமல் ஆட்சியர்களை காக்க வைத்து துன்புறுத்தக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவு
ரயில் பயணிகளுக்கு மலிவு விலை உணவு வழங்கும் IRCTC; ரூ.20க்கு 7 பூரிகளுடன், மசாலா கிழங்கு.. 100 ரயில் நிலையங்களில் 150 கவுன்டர்கள் திறப்பு..!!
பண மோசடி வழக்கில் ஜாமின் கோரிய செந்தில் பாலாஜியின் மேல்முறையீடு மனு மீதான விசாரணையை மே 15ம் தேதிக்கு தள்ளிவைத்தது உச்சநீதிமன்றம்..!!
ஜார்க்கண்டில் பரபரப்பு!: மலைபோல் குவித்து வைக்கப்பட்டிருந்த ரூ.25 கோடி பணம் பறிமுதல்; அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை..!!
விமானப்படை வீரர்கள் மீது தீவிரவாத தாக்குதல் காஷ்மீரில் 2வது நாளாக தேடுதல் வேட்டை: சந்தேகத்தின் பேரில் பலரிடம் விசாரணை
முல்லைப் பெரியாறு அணையில் கூடுதல் பராமரிப்பு கேரளா அரசுக்கு உத்தரவிட தமிழ்நாடு அரசு மனு: உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்
அரசு பஸ் டிரைவருடன் தகராறு திருவனந்தபுரம் மேயர், கணவர் மீது வழக்குப்பதிவு: நீதிமன்ற உத்தரவின் பேரில் நடவடிக்கை
தமிழ்நாடு முழுவதும் 200 மையங்களில் 1.50 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதினர்: இயற்பியல் கேள்விகள் கடினம்; தேர்ச்சி வீதம் குறையும் என அச்சம்