பெரம்பலூர் மாவட்டத்தில் 4 ஊராட்சிகளில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகள்-ஊரக வளர்ச்சி துறை அதிகாரி ஆய்வு

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டத்தில் ஊரா ட்சிகளில் அமைக்கப்பட்டு ள்ள கோவிட்-கேர் சென்டர், தொற்று கணக்கெடுப்புப் பணி, தடுப்புப் பணிகளை தமிழ்நாடு ஊரகவளர்ச்சித் துறை கூடுதல் இயக்குநர் சம்பத் நேரில் ஆய்வு செயதார்.தமிழ்நாடு ஊரக வளர்ச்சி த் துறையின் கூடுதல் இய க்குநர் சம்பத் நேற்று பெர ம்பலூர் மாவட்டத்திலுள்ள 4ஊராட்சிகளில் கொரோ னா தடுப்புமற்றும் முன்னெ ச்சரிக்கைப் பணிகள், நோ ய்த் தொற்று கண்டறியும் பணிகள், கோவிட் கேர் செ ன்டர்களில் அளிக்கப்படும் சிகிச்சை முறைகளை நேரில் ஆய்வு செய்தார்.

அதில் ஆலம்பாடி ஊராட்சி செஞ்சேரி கிராமத்தில் பல்வேறு தெருக்களில் உள்ள வீடுக ளில் கிருமிநாசினி தெளிப் பதையும், கிராம செவிலி யர், ஊராட்சிசெயலர், சுய உதவிக்குழு இணைந்த நோய்த்தொற்று கண்டறி யும் குழுவின் கணக்கெடுப்புப் பணிகளை, ரூ24 ஆயி ரம் மதிப்பில் கட்டப் பட்டு ள்ள நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் கூடாரத்தை நேரில்ஆய்வுசெய்து ஊராட்சி மன்றத் தலைவர் கல்பனா சீனிவாசனிடம் விபரங்கள் கேட்டறிந்தார்.

மேலும் சாரண,சாரணியர் பயிற்சி மையத்தில் அமை த்துள்ள கோவிட்-கேர் சென் டரைஆய்வுசெய்தார்.பிறகு கொரோனா நோயாளிகள் தங்கியுள்ள தனலட்சுமி ஊ ரக சுகாதார மையத்தைப் பார்வையிட்டு அங்கு பணி யிலிருந்த டாக்டர் மூனீஸ்வ ரியிடம் சிகிச்சை முறைகள் குறித்துக் கேட்டறிந்தார். இ தே போல் வேப்பந்தட்டை, வெங்கலம்ஊராட்சிக்கு உ ட்பட்ட கிருஷ்ணாபுரம், உடும்பியம் ஊராட்சிகளில் நோ ய்த் தொற்று கணக்கெடுப் புப் பணி, தூய்மைப்பணி, கபசுரக் குடிநீர் வழங்கும் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.

முன்னதாக அனைத்து வட்டாரவளர்ச் சி அலுவலர்களிடம் கலெக் டர் அலுவலகத்தில் ஆய்வு செய்தார். ஆய்வின்போது பெர ம்பலூர் மாவட்ட ஊரக வள ர்ச்சி முகமையின் திட்டஇய க்குநர் லோகேஸ்வரி, செய ற்பொறியாளர் செந்தில் குமார், ஊராட்சிகள் உதவி இ யக்குநர் பாரதிதாசன், உத வித் திட்ட அலுவலர்கள் கணபதி, காண்ணாயிரம், வட்டார வளர்ச்சி அலுவலர் கள் பெரம்பலூர் மோகன், (கிஊ)செந்தில், வேப்பந்த ட்டை முரளிதரன், (கிஊ) இ ளங்கோவன், ஆலம்பாடி ஊராட்சிமன்றத் தலைவர் கல்பனா சீனிவாசன் மற்று ம் வேப்பந்தட்டை, வெங்க லம், உடும்பியம் ஊராட்சிம ன்றத் தலைவர்கள் உடனிருந்தனர்.

Related Stories: