ஆம்பூர் அருகே போலீசார் வீதி வீதியாக கொரோனா விழிப்புணர்வு

ஆம்பூர் : ஆம்பூர் அருகே வீதி வீதியாக சென்று கொரோனா தடுப்பு குறித்த விழிப்புணர்வு பிரசாரத்தை உம்ராபாத் போலீசார் மேற்கொண்டனர்.

ஆம்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்றினால் பலர் நாள்தோறும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். சமூக இடைவெளி, மாஸ்க் அணிதல், அடிக்கடி சோப்பால் கை கழுவுதல், காய்ச்சல் இருந்தால் உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனை அல்லது ஆரம்ப சுகாதார நிலையத்தை அணுகி விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

உள்ளாட்சி மற்றும் நகராட்சி, வருவாய் துறை சார்பாக விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது ஆம்பூர் சப்- டிவிஷனில் போலீசார் களமிறங்கி உள்ளனர். உம்ராபாத் போலீசார் ஆட்டோவில் வீதி வீதியாக சென்று கொரோனா வைரஸ் தொற்று குறித்து பிரசாரம் செய்தனர்.

இதைத்தொடர்ந்து நேற்று ஒலி பெருக்கி கொண்டு நேற்று உம்ராபாத், கடாம்பூர், நரியம்பட்டு, கைலாசகிரி ஆகிய இடங்களில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சமூக இடைவெளியை வலியுறுத்தியும், கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து தற்காத்து கொள்ளும் வழிமுறைகள் குறித்தும் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டனர்.

Related Stories: