அம்பானி தொடர்ந்து நம்பர்-1 ஆசியாவின் 2வது பெரிய பணக்காரர் ஆனார் அதானி: கொரோனா காலத்திலும் படுவளர்ச்சி

மும்பை: ஆசியாவின் 2வது பெரிய பணக்காரர் கவுதம் அதானி வளர்ச்சி அடைந்துள்ளார். முகேஷ் அம்பானி தொடர்ந்து நம்பர்-1 இடத்தில் நீடிக்கிறார். அமெரிக்காவின் ப்ளூம்பர்க் இதழ் உலக பணக்காரர்கள் பட்டியலை தொடர்ந்து பராமரித்து வருகிறது. அந்த இதழின் சமீபத்திய பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில், ஆசியாவின் 2வது பெரிய பணக்காரராக குஜராத்தைச் சேர்ந்த தொழிலதிபர் கவுதம் அதானி முன்னேறி உள்ளார். இவர் சீனாவின் ஜாங் ஷான்ஷானை முந்தி உள்ளார். ரிலையன்ஸ் நிறுவனத்தின் முகேஷ் அம்பானி தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறார். உலக பணக்காரர்கள் தரவரிசையில் அம்பானி 13வது இடத்திலும், அதானி 14வது இடத்திலும் உள்ளனர்.

நடப்பாண்டில் கொரோனா பாதிப்பால் அம்பானியின் சொத்து மதிப்பு ரூ.1,250 கோடி வீழ்ச்சி அடைந்திருப்பதாக ப்ளூம்பர்க் கூறி உள்ளது. அதே போல சீன தொழிலதிபர் ஜாங் சொத்து மதிப்பு சுமார் ரூ.1 லட்சம் கோடி வரை சரிந்துள்ளது.

ஆனால், கொரோனா பாதிப்பிலும் கூட அதானி சொத்து மதிப்பு சுமார் 2.3 லட்சம் கோடி அதிகரித்துள்ளது. அம்பானி ரூ.5.5 லட்சம் கோடியுடன் முதல் இடத்திலும், அதானி ரூ.4.85 லட்சம் கோடியுடன் 2வது இடத்திலும், சீனாவின் ஜாங் 4.64 லட்சம் கோடியுடன் 3வது இடத்திலும் உள்ளனர்.

Related Stories: