தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு காவலர்கள் மீது நடவடிக்கை: வைகோ வலியுறுத்தல்

சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை: 2018 மே 22ம் தேதி தூத்துக்குடியில் 13 அப்பாவி தமிழர்கள் சுட்டு படுகொலை செய்யப்பட்டார்கள். தமிழ்நாட்டில் இதுவரை நடக்காத கொடுமை அது. அவர்களை சுட்டுக்கொன்ற அந்த குற்றவாளிகள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும்  இல்லை. சாத்தான்குளத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் என்ற அப்பாவி வணிகர்களை அடித்துக் கொன்ற காவல்துறையினர் மீது, கொலை குற்ற வழக்கு பதிவு செய்து, கைது செய்ய வேண்டும் என நான் அறிக்கை விடுத்தேன். அதன்படியே, கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கின்றனர். வழக்கு நடக்கின்றது. அதுபோல, ஸ்டெர்லைட் ஆலைக்காக, 13 பேரை சுட்டுக்கொன்ற காவலர்கள் மீதும், கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும். அவர்களை கைது செய்ய வேண்டும். அப்பொழுதுதான், இறந்தவர்களுக்கு நீதி கிடைக்கும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: