கமல் கட்சியின் பொதுச்செயலாளர் குமரவேல் விலகல்

சென்னை: கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து மற்றொரு பொதுச்செயலாளர் சி.கே.குமரவேல் விலகியுள்ளார். நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் படுதோல்வி அடைந்தது. கட்சியின் தலைவரான கமல்ஹாசனாலும் தனது தொகுதியில் வெற்றி பெற முடியவில்லை. இதையடுத்து கட்சியிலிருந்து ஒவ்வொருவராக  விலகிக் கொண்டிருக்கிறார்கள். ஆர்.மகேந்திரன், முருகானந்தம், சந்தோஷ் பாபு, பத்மப்ரியா உள்ளிட்ட  முக்கிய நிர்வாகிகள் பலர் விலகி உள்ளனர். நேற்றுமுன்தினம் திருச்சி மாவட்டத்தின் முக்கியப் புள்ளியான முருகானந்தம் தனது  ஆதரவாளர்களுடன் பதவி விலகினார்.

 இந்நிலையில் பொதுச்செயலாளர்களில் ஒருவராக பதவி வகித்த சி.கே.குமரவேல், நேற்று தனது அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகுவதாக தெரிவித்தார். அவர் கூறும்போது, ‘ஒரு தொகுதியில்  கூட வெற்றிப் பெறாததற்கு கமலின் அரசியல் ஆலோசகர்களும் அவர்களது தவறான வழிநடத்தலுமே காரணம். 233 தொகுதிகள் போனாலும் பரவாயில்லை, ஒரு தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றால் போதும் என கமல் நினைத்தார்.  தலைவருக்கான தகுதியை கமல்ஹாசன் இழந்துவிட்டார். தனிமனித பிம்ப அரசியலைவிட்டு மதச்சார்பற்ற ஜனநாயக அரசியல் பாதையில் பயணிக்க விரும்புகிறேன். வரலாறு படைப்பதற்குப் பதில் வரலாறு படிப்பவர்களாக மாறிவிட்டோம் என்ற  கோபம், ஆதங்கம் உள்ளது. ஏற்கனவே, விலகியவர்கள் முன்வைத்த காரணங்களில் உண்மை உள்ளதை கமலும் அறிவார்’ என்றார்.

Related Stories: