முக்கிய செய்தி தமிழகம் மதுரையில் இதுவரை 50 பேருக்கு கருப்பு பூஞ்சை தொற்று உறுதி; கொரோனா நோயின் பக்க விளைவுகள் என மருத்துவர்கள் விளக்கம் May 20, 2021 மதுரோ மதுரை: மதுரையில் இதுவரை 50 பேருக்கு கருப்பு பூஞ்சை தொற்று பாதிக்கப்பட்டுள்ளது என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. கொரோனா நோய் தொற்றின் பக்க விளைவுகள் என மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர். ஏற்கனவே கொரோனா பாதித்தவர்கள் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்ததால் பக்க விளைவுகள் ஏற்படும் என மருத்துவர்கள் கூறினர். கருப்பு பூஞ்சை அறிகுறி வந்த பின்பு தாமதித்தால் உயிர் இழக்கும் அபாயம் ஏற்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். ராஜஸ்தான், டெல்லி, ஆந்திரா, கேரளாவில் கருப்பு பூஞ்சை தொற்று கண்டறியப்பட்டது. பிற மாநிலங்களில் இருந்த கருப்பு பூஞ்சை தொற்று தமிழகத்திலும் கண்டறியப்பட்டுள்ளது. கொரோனாவில் இருந்து மீண்ட சர்க்கரை நோயாளிகள் சுற்றுச்சூழலில் உள்ள mucor-mycosis என்ற பூஞ்சை தொற்றுக்கு அதிகம் ஆளாகின்றனர். இவ்வகை கரும்பூஞ்சை தொற்றுக்கு ஆளாகும்போது கண்வலி,கண் வீக்கம், பின்னர் பார்வை இழப்பு ஏற்படுகிறது. சில நோயாளிகளுக்கு மூக்கில் ரத்தம் வருதல், பின்னர் மூளையிலும் பாதிப்பு ஏற்பட்டு உயிரிழப்பும் நேரிடுகிறது. சென்னை மற்றும் தமிழகத்தில் வெகு சில இடங்களில் அரிதாக காணப்பட்டு வந்த இந்த பாதிப்பு , தற்போது நாடு முழுக்க கொரோனா இரண்டாம் அலைக்கு பிறகு 10 முதல் 20 மடங்கு அதிகரித்துள்ளது என மருத்துவர்கள் கூறினர்.
கனமழையும் இருக்கு… வெப்ப அலையும் இருக்கு!.. அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலை வீசும்.. 7ம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!!
இந்திரா காந்தி, சோனியா காந்தி இருவரும் பல முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற ரேபரேலி மக்களவைத் தொகுதியில் களம் இறங்கினார் ராகுல் காந்தி!!
அமேதி தொகுதியை பார்த்து அச்சமடைந்த ராகுல் காந்தி தற்போது ரேபரேலியை தேர்வு செய்துள்ளார் : பிரதமர் மோடி தேர்தல் பரப்புரை!!
விருத்தாசலம் அருகே ரயிலில் இருந்து தவறி விழுந்து கர்ப்பிணி உயிரிழந்த சம்பவத்தில் விசாரணைக் குழு அமைப்பு
என் கனவுத் திட்டமாக தொடங்கி பலரது கனவுகளை நான் முதல்வன் திட்டம் நனவாக்கி வருகிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
எச்.டி.ரேவண்ணா மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு… 24 மணி நேரத்தில் ஆஜராகவில்லை எனில் கைது செய்ய நேரிடும் என போலீஸ் எச்சரிக்கை
தமிழ்நாடு முழுவதும் அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகள் போர்க்கால அடிப்படையில் பழுதுபார்ப்பு: போக்குவரத்து துறை தகவல்
தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வரும் 6-ல் வெளியிடப்படும் :பள்ளிக்கல்வித்துறை
பாலியல் பலாத்காரம் செய்ததாக முன்னாள் பிரதமர் தேகவுடாவின் பேரன் பிரஜ்வல் மீது புதிய வழக்கு : கைது செய்ய ஜெர்மனி விரைகிறது தனிப்படை?
ரயிலில் இருந்து தவறி விழுந்து கர்ப்பிணி உயிரிழந்தது தொடர்பாக கோட்டாட்சியர் விசாரணைக்கு ரயில்வே காவல்துறை பரிந்துரை
ரேபரேலி தொகுதியில் போட்டியிடுகிறார் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி: இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்கிறார்
தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் என்று கூறப்படும் கத்தரி வெயில் நாளை தொடங்குகிறது: மே 28 வரை வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என கணிப்பு
நாமக்கல்லில் சிக்கன் ரைஸ் சாப்பிட்டு முதியவர் உயிரிழந்த வழக்கில் கல்லூரி மாணவர் கைது: வழக்கில் புதிய திருப்பம்
அக்னி நட்சத்திரம் நாளை துவங்க உள்ள நிலையில் 17 இடங்களில் 100 டிகிரி வெயில் கொளுத்தியது: கரூர் 112, ஈரோடு 111, வேலூரில் 110 டிகிரி பதிவு; 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்; வானிலை ஆய்வு மையம் அறிக்கை
ஆட்சிக்கு வந்து 10 ஆண்டுகளில் பாரதிய ஜனதா கட்சி மலைக்க வைக்கும் அளவுக்கு ரூ.60,000 கோடிக்கு மேல் செலவு
ஆபாச வீடியோ பிரச்னை விஸ்வரூபம் எடுப்பதால் ஆந்திராவில் பிரசாரம் செய்ய பிரதமர் மோடி, அமித்ஷா மறுப்பு?: சந்திரபாபு, பவன்கல்யாண் `அப்செட்’
மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தின்கீழ் 12 மாவட்டங்களில் ₹306 கோடி வசூலிப்பு: சென்னை உயர் நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாகம் தகவல்