பயணத்தின் போது 21 நாட்கள் இடைவெளியில் அவர்களுக்கு 2வது தவணை தடுப்பூசியும் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 24 நாட்களை கொண்ட ரஷ்ய தடுப்பூசி சுற்றுலா பயணத்திற்கு, சுற்றுலா பயணிகளிடம் இருந்து தலா 1.3 லட்சம் ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. முதல் மூன்று நாட்களை பீட்டர்ஸ்பர்கிலும், எஞ்சிய நாட்களை மாஸ்கோவில் செலவிடும் வகையிலும் சுற்றுலா வடிவமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே டெல்லியில் இருந்து 30 பேர் அடங்கிய முதல் தடுப்பூசி சுற்றுலா குழு கடந்த 15ம் தேதி ரஷ்யா புறப்பட்டு சென்றுள்ளது. 2வது குழு வருகின்ற 29ம் தேதி ரஷ்யா புறப்படவிருக்கிறது. 1 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் செலவில் 24 நாட்களில் ரஷ்யாவை சுற்றி பார்ப்பதுடன் தடுப்பூசியும் செலுத்திக்கொள்ள முடியும் என்பதால் ரஷ்ய தடுப்பூசி சுற்றுலா பயணம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்திய பயணிகள் நுழைய, பல்வேறு நாடுகள் தடைவிதித்துள்ள நிலையில், இந்தியர்கள் தடுப்பூசி சுற்றுலாவில் ரஷ்யா வர அந்நாட்டு அரசு பச்சைக்கொடி காட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.