கொரோனாவுக்கு எதிரான முக்கிய ஆயுதமான தடுப்பூசி மீதான கட்டுக்கதைகள் வேரறுக்கப்பட வேண்டும்: பிரதமர் மோடி வலியுறுத்தல்

புதுடெல்லி: ‘கொரோனாவை ஒழிப்பதில் மிக முக்கிய ஆயுதம் தடுப்பூசியே. எனவே தடுப்பூசி மீதான கட்டுக்கதைகள் வேரறுக்கப்பட வேண்டும்’ என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.  கொரோனா நோய் தொற்றினால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்ட அதிகாரிகளுடன் பிரதமர் மோடி நேற்று வீடியோ கான்பரன்சிங் மூலமாக ஆலோசனை நடத்தினார். 9 மாநிலங்களை சேர்ந்த 46 மாவட்டங்களின் ஆட்சியர்கள் இந்த கூட்டத்தில்  கலந்து கொண்டனர்.

அப்போது பிரதமர் மோடி பேசியதாவது: நோய் பாதிப்புக்கு ஏற்றபடி மேற்கொள்ள வேண்டிய தேவையான நடவடிக்கைகளை சுதந்திரமாக மேற்கொள்ள வேண்டும். கொரோனா தடுப்பூசி கொள்கையில் ஏதேனும் மாற்றம் செய்யப்பட வேண்டுமா என்பது பற்றி தாராளமாக என்னிடம்  தெரிவிக்கலாம். கொரோனாவை எதிர்த்து போராடுவதற்கு தடுப்பூசி ஒரு வலிமையான ஆயுதமாகும். தடுப்பூசி குறித்த கட்டுக்கதகைள் வேரறுக்கப்பட வேண்டும். கொரோனா தடுப்பூசி விநியோகத்தை  அதிகரிப்பதற்கு தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு  வருகின்றது.

அட்டவணைப்படி மாநிலங்கள் தயாராவதற்கு ஏதுவாக 15 நாட்களுக்கு முன்கூட்டியே கொரோனா தடுப்பூசிகள் வழங்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. கொரோனா வைரஸ் பரவலை கண்டறிந்து கட்டுப்படுத்துவதற்கு   சோதனை, கண்காணிப்பு சிகிச்சை மற்றும் கொரோனா நடத்தை வழிமுறைகளை ஆகியவை முக்கியமாகும்.  

கொரோனா நோய் தொற்று பாதிக்கப்பட்டபோதிலும் மக்களுக்காக பணியாற்றிய அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவிக்கிறேன். சிலர் தங்களது குடும்ப உறுப்பினர்களை இழந்துள்ளனர். எனினும் தங்களது கடமைக்கு முன்னுரிமை கொடுத்துள்ளனர்.  கொரோனா இரண்டாவது அலையிலன்போது கிராமப்புறங்கள் மற்றும் தொலை தூர பகுதிகளில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும். மாவட்ட அளவில் தொற்று பரவலை கட்டுப்படுத்தினால்தான், கொரோனாவை நாம் வெல்ல  முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories:

>