கொரோனாவால் உயிருக்கு போராடும் கணவன்; சொத்த எழுதி வச்சா... கிட்னியை தர்றேன்! மனைவியின் தடாலடி பதிலால் மருத்துவமனையில் அடிதடி

பரத்பூர்: கொரோனாவால் உயிருக்கு போராடும் கணவனுக்கு கிட்னி தரவேண்டுமானால், அவரது சொத்தை தனது பெயருக்கு எழுதிவைக்க மனைவி கூறியதால், மருத்துவமனையில் அடிதடி மோதல் நடந்தது. ராஜஸ்தான் மாநிலம் பாரத்பூரின் மாவட்ட ஆர்.பி.எம் மருத்துவமனையில் அமைந்துள்ள கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட ஒரு நோயாளியின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் இடையே கடுமையான சண்டை நடந்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இருப்பினும், இவர்களின் அடிதடி சம்பவம் தொடர்பாக எந்தவொரு தரப்பினரின் சார்பிலும் போலீசில் புகார் ஏதும் கொடுக்கவில்லை.

விசாரணையில், தனோட்டா கிராமத்தில் வசிக்கும் ரூப்காஷோர் என்பவருக்கு சிறுநீரக பாதிப்பு (கிட்னி) இருந்த நிலையில், அவர் கொரோனா தொற்றுநோயால் பாதிக்கப்பட்டார். அதனால் அவர் மாவட்ட மருத்துவமனையின் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டார். அவரது உயிரைக் காப்பாற்ற வேண்டுமானால், செயலிழந்த சிறுநீரகத்திற்கு மாற்றாக யாராவது சிறுநீரகத்தை தானம் செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதையடுத்து அந்த ரூப்காஷோரின் குடும்பத்தினர், அவரது மனைவியிடம் ‘உன்னுடைய கணவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதால், உனது சிறுநீரகத்தில் ஒன்றை தானமாக கொடு’ என்று கேட்டுள்ளனர்.

ஆனால், அவரது மனைவி தனது சிறுநீரகத்தை தானமாக தர மறுத்துவிட்டார். மேலும் அவர் கூறுகையில், ‘கணவர் ரூப்கிஷோரின் அனைத்து சொத்துகளையும், என்னுடைய பெயருக்கு மாற்றினால், நான் எனது சிறுநீரகத்தை தானமாக தருகிறேன்’ என்றார். இதனால், இருதரப்பினருக்கும் மருத்துவமனையில் அடிதடி, மோதல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, மாவட்ட மருத்துவமனையின் பி.எம்.ஓ டாக்டர் ஜயாசா சாஹ்னி கூறுகையில், ‘கொரோனா வார்டுகள் குடும்பத்தினர் செல்ல அனுமதியில்லை. ஆனால், அவர்களை உள்ளே அனுமதித்த பாதுகாப்பு போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறுநீரகத்தால் பாதிக்கப்பட்ட கொரோனா நோயாளி தொடர் சிகிச்சையில்தான் உள்ளார்’ என்றார்.

Related Stories: