கொரோனா பாதித்த பெண்ணை ஆம்புலன்சில் வைத்து பலாத்காரம்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் வண்டூர் பகுதியை சேர்ந்த 38 வயதான ஒரு இளம்பெண், கொரோனா பாதிக்கப்பட்டு பெரிந்தல்மண்ணா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு ஸ்கேன் செய்ய வேண்டும் என டாக்டர்கள் பரிந்துரைத்தனர். இதற்காக கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த இளம்பெண்ணை ஒரு தனியார் பரிசோதனை கூடத்துக்கு ஆம்புலன்ஸில் கொண்டு சென்றனர்.

அந்த ஆம்புலன்ஸில் உதவியாளரான பிரசாத் என்பவரும் இருந்துள்ளார். அவர் திடீரென அந்த இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். ஆனால் அதற்குள் பரிசோதனை கூடம் வந்து விட்டதால் அவரது எண்ணம் நிறைவேறவில்லை. பெரிந்தல்மண்ணா போலீசார் வழக்குப்பதிவு ெசய்து பிரசாந்தை கைது செய்தனர்.

Related Stories:

>