நாங்க நிறுத்திட்டோம்... நீங்க? மத்திய அரசுக்கு சவால் விடும் சட்டீஸ்கர் மாநில காங். அரசு

ராய்ப்பூர்: சட்டீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் புதிய கவர்னர் மாளிகை, சட்டப்பேரவை கட்டிடம், முதல்வர் இல்லம், அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளுக்கான வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள் கட்ட கடந்த 2019ம் ஆண்டு பூமி பூஜை  போடப்பட்டது. இந்நிலையில், சட்டீஸ்கரிலும் கொரோனா 2வது அலை தீவிர பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. எனவே, புதிய சட்டப்பேரவை கட்டிடத்திற்கான நிறுத்த அம்மாநில காங்கிரஸ் முதல்வர் பூபேஷ் பாகேல் உத்தரவிட்டுள்ளார்.

 

புதிய சட்டப்பேரவை கட்டிடத்திற்காக ஏற்கனவே விடப்பட்ட டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அரசின் பெரிய கட்டிடங்கள் கட்டும் பணியும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மாநில அரசின் செலவை கட்டுப்படுத்தி அந்த பணத்தை  கொரோனா கட்டுப்பாட்டு பணிகளுக்கு பயன்படுத்தும் நோக்கில் மாநில அரசு இத்தகைய முடிவை எடுத்திருப்பதாக முதல்வர் பாகேல் கூறி உள்ளார்.

அனைத்து துறைகளும் சிக்கன நடவடிக்கையை மேற்கொள்ளுமாறும் முதல்வர் பாகேல்  உத்தரவிட்டுள்ளார். நாடு முழுவதும் கொரோனா பரவி வரும் சூழலில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் உள்ளிட்ட மத்திய விஸ்டா திட்டத்தை நிறுத்துமாறு மத்திய அரசை காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது. மத்திய அரசை எதிர்க்கும் காங்கிரஸ்  கட்சி தனது மாநிலத்தில் புதிய சட்டப்பேரவை கட்டிடம் கட்டுவது ஏன்? என பாஜவினர் கேள்வி எழுப்பி இருந்தனர். தற்போது மத்திய அரசுக்கு சவால் விடுக்கும் வகையில் சட்டீஸ்கர் அரசு இப்பணியை நிறுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: