முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு திமுக எம்.பி, எம்எல்ஏக்கள் 1 மாத ஊதியம் வழங்குவர்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: திமுக சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது ஒரு மாத ஊதியத்தை ‘முதலமைச்சர் பொது நிவாரண நிதி’க்கு வழங்குவார்கள் என முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கொரோனா இரண்டாவது அலையால், தமிழகம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது ஒரு மாத ஊதியத்தை முதலமைச்சர் பொது நிவாரண நிதியாக வழங்குவார்கள்’ எனக் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>