ரெகுலர் பணிக்கு வராமல் தில்லுமுல்லு முன்னாள் அமைச்சர் வேலுமணி உதவியாளர் சஸ்பெண்ட்: கோவை மாநகராட்சி கமிஷனர் அதிரடி

கோவை: கோவை மாநகராட்சியில் ரெகுலர் பணிக்கு வராமல் தில்லுமுல்லு வேலைகளில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் வேலுமணியின் உதவியாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியின்போது, உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் நேர்முக உதவியாளராக இருந்தவர் சரவணன். இவர், கோவை மாநகராட்சியில் இளநிலை பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர், அமைச்சரின் சென்னை அலுவலகத்தில்  முகாமிட்டு, பணியாற்றி வந்தார். தற்போது, ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, அமைச்சரின் நேர்முக உதவியாளர் பணி முடிவுக்கு வந்துவிட்டது. ஆனாலும் இவர், கோவை மாநகராட்சியின் ரெகுலர் பணிக்கு வரவில்லை. சென்னையிலேயே முகாமிட்டு, தில்லுமுல்லு வேலைகளில் ஈடுபட்டு வந்தார். அத்துடன், தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலின்போது, இவரிடமிருந்து பறக்கும் படை அதிகாரிகள் 18 லட்சம் பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக விளக்கம் கேட்டு, தேர்தல் ஆணையம் கோவை மாநகராட்சி நிர்வாகத்துக்கு கடிதம் அனுப்பியது. இந்த கடிதத்திற்கும் பதில் அளிக்கவில்லை. இதைத்தொடர்ந்து, இவரை சஸ்பெண்ட் செய்து, கோவை மாநகராட்சி கமிஷனர் குமாரவேல் பாண்டியன் நேற்று முன்தினம் உத்தரவு பிறப்பித்தார். இந்த தகவல், தேர்தல் ஆணையத்திற்கும் முறைப்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: