இந்திய வில்வித்தை வீரருக்கு கொரோனா: ஐ.சி.யூ.வில் அனுமதி

புதுடெல்லி: இந்திய வில் வித்தை வீரர் ஜெயந்த தலுக்தார் கொரோனா தொற்று பாதித்து மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து உச்சம் தொட்டு வந்த கொரோனா பாதிப்புகள் நேற்று சற்று குறைந்தது. இந்நிலையில், ஒரே நாளில் 3.68 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று காலை தெரிவித்தது. இதனால், 1.99 கோடி பேருக்கு பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளது. 3,417 பேர் உயிரிழந்து உள்ளனர்.

இந்நிலையில், இந்திய வில் வித்தை வீரர் ஜெயந்த தலுக்தார் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அசாமின் கவுகாத்தி நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு உள்ளார். இதனை இந்திய வில்வித்தை கூட்டமைப்பு அதிகாரி ஒருவரும் உறுதி செய்துள்ளார். அவர் நலமுடன் இருக்கிறார் என்றும் கவலைப்பட ஒன்றுமில்லை என்றும் அந்த அதிகாரி தெரிவித்து உள்ளார்.

Related Stories:

>