இந்தியா மறுத்துவிட்டதா மனிதநேயம்!: ஆந்திராவில் கொரோனா தொற்றால் தனித்துவிடப்பட்ட நோயாளி குடும்பத்தினர் கண் முன்னே துடிதுடித்து பலி..!! May 04, 2021 ஆந்திரப் பிரதேசம் ஸ்ரீகாகுளம்: கொரோனா தொற்று ஏற்பட்டதால் ஊரின் ஒதுக்குப்புறத்தில் தனித்துவிடப்பட்ட தொழிலாளி குடும்பத்தினர் கண் முன்னே துடிதுடித்து உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் ஜிசிகிதம் மடலம் கோயனப்பெட்டா கிராமத்தை சேர்ந்தவர் ஆசிரி நாயுடு. விஜயவாடாவில் கூலி தொழிலாளியாக பணிபுரிந்து வந்த ஆசிரி நாயுடுவுக்கு பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து குடும்பத்தில் உள்ள மற்றவர்களுக்கும் கொரோனா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, ஆசிரி நாயுடு குடும்பத்துடன் சொந்த ஊருக்கு சென்றார். ஆனால் ஊரில் இருந்து வெகுதொலைவில் உள்ள ஒரு குடிசையில் தங்குமாறு உள்ளூர் வாசிகள் தெரிவித்தனர். உரிய சிகிச்சை இல்லாமல் ஆசிரி நாயுடு உடல்நிலை கவலைக்கிடமானது. குடிசை வெளியிலேயே மூச்சு விடமுடியாமல் அவர் திணறி துடித்து கொண்டிருந்தார். தந்தையின் துடிப்பை பார்க்க முடியாத மகள் தண்ணீரை தந்தையின் வாயிலேயே ஊற்றிய சில நிமிடங்களிலேயே ஆசிரி நாயுடு மனைவி, குழந்தைகள் கண்முன்னே துடிதுடித்து உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்திரா காந்தி, சோனியா காந்தி இருவரும் பல முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற ரேபரேலி மக்களவைத் தொகுதியில் களம் இறங்கினார் ராகுல் காந்தி!!
அமேதி தொகுதியை பார்த்து அச்சமடைந்த ராகுல் காந்தி தற்போது ரேபரேலியை தேர்வு செய்துள்ளார் : பிரதமர் மோடி தேர்தல் பரப்புரை!!
உத்தரப்பிரதேசம் மாநிலம் ரேபரேலி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ராகுல்காந்தி வேட்புமனு தாக்கல் செய்தார்..!!
எச்.டி.ரேவண்ணா மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு… 24 மணி நேரத்தில் ஆஜராகவில்லை எனில் கைது செய்ய நேரிடும் என போலீஸ் எச்சரிக்கை
பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறையின் கைதை எதிர்த்த ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் மனு தள்ளுபடி..!!