டூ பிளெஸ்ஸி, மொயின், அம்பாதி ராயுடு அரைசதம் மும்பைக்கு 219 இலக்கு நிர்ணயித்து சென்னை

புதுடெல்லி: சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் அம்பாதி ராயுடு சரவெடியாக 72 ரன் அடித்தார். இதனால் சென்னை அணி 4 விக்கெட் இழப்புக்கு 218 குவித்தது. புது டெல்லியில் துவங்கிய ஐபிஎல் தொடரின் 27வது போட்டியில் நேற்று டாஸ் வென்ற மும்பை அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கெய்க்வாட், டூ பிளெப்ஸி களம் இறங்கினர். போல்ட்டின் முதல் ஓவரிலேயே 4 ரன் எடுத்த நிலையில் கெய்க்வாட் அவுட் ஆனார். இதன் பின்னர் களமிறங்கிய மொயின் அலி 33 பந்தில் 50 ரன் அடித்தார். இருவரின் பார்ட்னர்ஷிப்பில் 10.1 ஓவரில் 101 ரன்னை எட்டியது. இந்நிலையில் 11 ஓவரில் பூம்ராவின் பந்தில் சிக்சர், பவுண்டரிகளாக டூபிளெப்ஸி தெறிக்கவிட்டார்.

அதே ஓவரின் 5 பந்தில் மொயின் அலி 58 ரன் (36 பந்து, 5 பவுண்டரி, 5 சிக்சர்) விக்கெட் கீப்பர் டீகாக்கிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இதையடுத் பொல்லார்டு பந்து வீச அழைத்தார் ரோகித் சர்மா. அவரது முடிவு சரி என்பதை நிரூபித்தார் பொல்லார்டு, தன் ஓவரின் கடைசி இரண்டு பந்துகளில் டூ பிளெப்ஸி 50 ரன் (28 பந்து, 2 பவுண்டரி , 4 சிக்சர்) எடுத்து பொல்லார்டு பந்தில் அவுட் ஆனார். அடுத்த பந்திலேயே 2 ரன் எடுத்த நிலையில் ரெய்னா வெளியேறினார். அடுத்து வந்த அம்பாதி ராயுடுவின் சரவெடிவெடியாக வெடித்தார். அவர் 72 ரன் (27 பந்து, 4 பவுண்டரி 7 சிக்சர் ) எடுத்தார். அவருக்கு உறுதுணையாக ஜடேஜா மறுமுனையில் 22 ரன் எடுத்தார். இறுதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவரில் 4 விக்கெட் மட்டுமே இழந்து 218 ரன்கள் குவித்து. இந்த ஆட்டத்தில் பூம்ரா 4 ஓவரில் 1 விக்கெட் மட்டுமே எடுத்து 56 ரன்களை வாரி வழங்கினார்.

Related Stories: