காஞ்சி.யில் கோவிட் கேர் மையம்: கலெக்டர் மகேஸ்வரி பார்வையிட்டு ஆய்வு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா நோயாளிகள் பராமரிப்பு சிறப்பு மையம் துவங்குவதற்கு தேவையான ஏற்பாடுகளை சுகாதாரத்துறை மற்றும் உள்ளாட்சித்துறை மூலம் விரைந்து செயல்படுத்துமாறு மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார்  உத்தரவிட்டிருந்தார். அதன்படி அய்யங்கார்குளம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியி–்ல் கோவிட் கேர் மையம் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மையம் அமைக்கும் பணியை கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் நேற்று ஆய்வு செய்தார். பணி குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

பின்னர் அவர் கூறுகையில், ‘‘காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனாவின் 2வது அலை வேகமாக பரவி வருவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்த வைரசை தடுக்கும் வகையில் அய்யங்கார்குளம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரில் கோவிட் கேர்  மையம் அமைக்கப்பட்டு வருகிறது. இங்கு 400 பேருக்கு சிகிச்சை அளிக்க வசதி செய்யப்பட்டுள்ளது’’ என்றார். ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம், உதவி இயக்குனர் தர், காஞ்சிபுரம் தாசில்தார் நிர்மலா, பிடிஓக்கள் தினகரன், பவானி மற்றும் காஞ்சி பல்லவன் பொறியியல் கல்லூரி இயக்குநர் மோதிலால், முதல்வர் கார்த்திக் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Related Stories: