குன்னூர் அருகே பாறை மீது ஓய்வெடுத்த சிறுத்தை

குன்னூர் :  குன்னூர் அருகே அட்டடி பகுதியில் பாறையில் ஓய்வு எடுத்த சிறுத்தையை சிலர் புகைப்படங்கள் எடுத்தனர். குன்னூர் அருகே அட்டடி பகுதியில் சிறுத்தை ஒன்று அடிக்கடி மாலை நேரத்தில் பாறை மீது அமர்ந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் வன விலங்கு புகைப்பட கலைஞர்கள்  என கூறி  சிலர்  தினந்தோறும் அங்கு சென்று சிறுத்தையை புகைப்படங்கள் எடுத்து வருவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். மேலும் சிறுத்தையை புகைப்படம் எடுப்பதாக கூறி துன்புறுத்தி வருகின்றனர்.  இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், அட்டி பகுதி சோலை மரக்காடுகள் அதிகளவில் உள்ள பகுதி.

எனவே அங்கு சிறுத்தை நடமாட்டம் இருப்பது இயல்பு இதற்கு மேல் சிறுத்தையை புகைப்படங்கள் எடுப்பதாக கூறி எவரேனும் அங்கு சென்றால்  அந்த நபர்களிடம்  கேமராக்கள் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்யப்படும், என்றனர்.

ஆனால் அதனை மீறியும் சிலர் புகைப்படங்கள் எடுத்து வருகின்றனர். எனவே வனத்துறையினர் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வன விலங்கு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: