உபியில் ஊரடங்கு விதிக்க உச்ச நீதிமன்றம் தடை

உத்தரப்பிரதேச மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், லக்னோ உள்ளிட்ட 5 முக்கிய நகரங்களில் வரும் 26ம் தேதி வரை ஊரடங்கு விதிக்க அலகாபாத் உயர் நீதிமன்றம் நேற்று முன்தினம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து, உபி மாநில அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை நேற்று விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு, உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது. இந்த விஷயத்தில் நீதிமன்றத்திற்கு உதவ மூத்த வக்கீல் நரசிம்மாவை நியமித்து வழக்கை 2 வாரத்திற்கு தள்ளி வைத்தது.

Related Stories: