கந்துவட்டி குறித்து சித்திரம் வெளியிட்ட கார்ட்டூனிஸ்ட் பாலா மீதான வழக்கு ரத்து

மதுரை: கந்துவட்டி குறித்து சித்திரம் வெளியிட்ட கார்ட்டூனிஸ்ட் பாலா மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2017ல் கந்துவட்டி கொடுமையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் நெல்லை ஆட்சியர் அலுவலகம் முன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டனர். தற்கொலை தொடர்பாக அரசையும், அதிகாரிகளையும் விமர்சித்து கார்ட்டூன் வரைந்து வெளியிட்டதாக பாலா மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட பிரபல கார்ட்டூனிஸ்ட் பாலாவுக்கு நெல்லை நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி இளங்கோவன் பாலா மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

Related Stories:

>