தேசிய கபடி ரயில்வே சாம்பியன்

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் நடந்த தேசிய அளவிலான 68வது சீனியர் கபடி சாம்பியன்ஷிப் போட்டித் தொடரில், ரயில்வே அணி தொடர்ந்து 3வது முறையாக கோப்பையை முத்தமிட்டது. பரபரப்பான இறுதிப் போட்டியில், தமிழக வீரர் தர்மராஜ் சேரலாதன் தலைமையிலான நடப்பு சாம்பியன் இந்தியன் ரயில்வே 44-23 என்ற புள்ளி கணக்கில் சர்வீசஸ் அணியை வீழ்த்தி  சாம்பியன் பட்டம் வென்றது. ரயில்வே தொடர்ந்து 3வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று ஹாட்ரிக் சாதனை படைத்துள்ளது. மொத்தம் 30 அணிகள் பங்கேற்ற இந்த தொடரின் ‘ஜி’ பிரிவில் 2வது இடம் பிடித்து நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறிய தமிழகம், சர்வீசஸ் அணியிடம் 24-56 என்ற புள்ளிக் கணக்கில் தோற்று ஏமாற்றத்துடன் வெளியேறியது.

Related Stories:

>