புதுடெல்லி: கடந்த 40 ஆண்டில் உலகம் எப்படி எல்லாம் மாறியிருக்கிறது என்பதை செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலமாக கண்கூடாக பார்க்கக் கூடிய, ‘டைம் லாப்ஸ்’ வசதி, கூகுள் எர்த்தில் சேர்க்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை அறிவித்துள்ளார். ‘கூகுள் எர்த்’ என்ற இணையதள சேவையை கூகுள் நிறுவனம் கடந்த 2017ம் ஆண்டு தொடங்கியது. இதன் மூலம், புவியின் பல்வேறு பகுதிகளை 3டி வடிவில் செயற்கைக்கோள் புகைப்படங்களாக பார்க்க முடியும். இந்நிலையில், 4 ஆண்டுகளுக்குப் பிறகு கூகுள் எர்த்தில் கூகுள் நிறுவனம் மிகப்பெரிய மேம்பாட்டை (அப்டேட்) வழங்கி உள்ளது. அதாவது, கடந்த 37 ஆண்டுகளில் உலகம் எப்படியெல்லாம் மாறியிருக்கிறது என்பதை காட்டக் கூடிய, ’டைம் லாப்ஸ்’ என்ற புதிய அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது.