குருவிகுளம் அருகே உமையொருபாக ஈஸ்வரன் கோயிலில் 8 மாதத்திற்குள் கும்பாபிஷேகம் ராஜா எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் சேகர்பாபு விளக்கம்

சங்கரன்கோவில், மார்ச் 28: குருவிகுளம் அருகே உமையொருபாக ஈஸ்வரன் கோயிலில் 8 மாதத்திற்குள் கும்பாபிஷேகம் நடைபெறும் என ராஜா எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் சேகர்பாபு விளக்கம் அளித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் சங்கரன்கோவில் தொகுதி எம்எல்ஏ ராஜா (திமுக) பேசுகையில் ‘‘குருவிகுளம் அருகே சாயமலையில் 30 கிராம மக்கள் வழிபடும் 100 ஆண்டு பழமையான உமையொரு பாக ஈஸ்வரன் சமேத சிவகாமி அம்பாள் கோயில் திருப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்’’ என கோரிக்கை விடுத்தார். இதற்குப் பதிலளித்து  இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறுகையில் ‘‘மேல சிவகாமியாபுரத்தில் அமைந்துள்ள 100 ஆண்டுகள் பழமையான கோயிலிலான அருள்மிகு உமையொருபாக ஈஸ்வரன் கோயிலில் வரும் ஏப்ரல் மாதம் 10ம் தேதி பாலாலயம் செய்யப்பட்டு 8 மாத காலத்திற்குள் கும்பாபிஷேக பணிகள் நடத்தப்படும். இதற்கான 10 பணிகளில் 6 பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 4 பணிகள் விரைவில் முடிக்கப்படும். இதற்காக ரூ.45 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது’’ என்றார்.ராஜா எம்எல்ஏ:  1000 ஆண்டு பழமை வாய்ந்த சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயில் கும்பாபிஷேகத்தை இந்த ஆண்டுக்குள் நடத்த வேண்டும். தற்போது நகராட்சி வசமாக இருக்கும் ஆவுடைபொய்கைத் தெப்பத்தின் சுற்றுச்சுவர் மோசமான நிலையில் உள்ளதால் அதை பராமரிக்க வேண்டும். மேலும் அந்த தெப்பக்குளத்தை அறநிலையத்துறை வசம் ஒப்படைக்க வேண்டும். அமைச்சர் சேகர்பாபு : சங்கரநாராயண சுவாமி கோயில் கும்பாபிஷேக பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் ஓராண்டுக்குள் ரூ.6 கோடியே 35 லட்சம் மதிப்பில் கும்பாபிஷேகம் நடத்தப்படும். சங்கரன்கோவில் தங்கத்தேர் தற்போது தங்க முலாம் பூசும் பணிகள் இன்னும் ஒரிரு நாட்களுக்குள் தங்கமுலாம் பூசப்பட்டு மீண்டும் தங்கரத வீதி உலா நடைபெறும். ஆவுடைபொய்கை தெப்பம் அறநிலைத்துறை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்து சுமார் ரூ.90 லட்சம் செலவில் சரி செய்யப்பட்டு அடுத்த ஆண்டு தை மாதம் கடைசி வெள்ளி அன்று நடக்கும் தெப்ப தேரோட்டம் மிக உற்சாகமாக நடக்கும்….

The post குருவிகுளம் அருகே உமையொருபாக ஈஸ்வரன் கோயிலில் 8 மாதத்திற்குள் கும்பாபிஷேகம் ராஜா எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் சேகர்பாபு விளக்கம் appeared first on Dinakaran.

Related Stories: