இடித்து அகற்ற கோரிக்கை கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் வட்டார அளவில் இளம்சிறார் திரைப்பட போட்டி

கந்தர்வகோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியம் தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறையின் சார்பாக மாதம்தோறும் ஒளிபரப்பப்படும், சிறார் திரைப்படம், பள்ளி நூலகங்களில் மாணவர்கள் வாசிக்கும் புத்தகங்கள் சார்ந்த திறனாய்வு செய்தல், பள்ளி மாணவர்களுக்காக தமிழ்நாடு அரசு வெளியிடும் சிறார் மாத இதழான தேன் சிட்டு இதழில் வரும் அறிவுசார் தகவல்கள் சார்ந்த வினாடி -வினா போட்டி ஆகியவற்றிற்கான போட்டிகளை மாதந்தோறும் நடத்தப்பட்டு வருகிறது. வட்டார அளவிலான சிறார் திரைப்படமான 101 சோத்தியங்கள் போட்டி கந்தர்வகோட்டை வட்டார வள மையத்தில் நடைபெற்றது. இப்போட்டிக்கான ஏற்பாட்டினை வட்டார கல்வி அலுவலர்கள் வெங்கடேஸ்வரி, நரசிம்மன் ஆகியோர் செய்திருந்தனர். வட்டார வள மைய மேற்பார்வையாளர் பிரகாஷ் தொடங்கி வைத்தார்.பள்ளி அளவில் தேர்வுபெற்ற மாணவர்கள் வட்டார அளவிலான போட்டியில் கலந்து சிறார் திரைப்படம், சுவரொட்டி தயாரித்தல், சிறார் திரைப்பட கதைச்சுருக்கம் எழுதுதல், திரைப்பட காட்சியினை இயக்குதல் ஆகிய தலைப்புகளில் மாணவர்கள் பங்கேற்றனர். இந்த போட்டியினை முள்ளிக்காப்பட்டி, முதுகுளம் நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் தங்கராசு, அருண்வாலன்டைன் ஆகியோர் செயல்பட்டனர். இதில் வெற்றி பெற்றவர்கள் மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்பார்கள். இந்த நிகழ்ச்சியில் ஆசிரியர் பயிற்றுநர்கள் சங்கிலி முத்து, பாரதிதாசன் இல்லம் தேடிக் கல்வி ஒருங்கிணைப்பாளர் ரகமதுல்லா, ஆசிரியர்கள் தங்கதுரை, சுதா ஆகியோர் கலந்து கொண்டனர்….

The post இடித்து அகற்ற கோரிக்கை கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் வட்டார அளவில் இளம்சிறார் திரைப்பட போட்டி appeared first on Dinakaran.

Related Stories: