முதல் அலை, 2வது அலை என எத்தனை வந்தாலும் கொரோனாவை வீழ்த்த கபசுரக் குடிநீரை விட்டால் வேறு மருந்தே உலகில் இல்லை: மூத்த சித்த மருத்துவர் ஜெயபிரகாஷ் நாராயணன் தகவல்

சென்னை: கொரோனாவில் முதல் அலை, 2வது அலை என எத்தனை அலை வந்தாலும் கூட கவலையில்லை, சித்த மருத்துவத்தில் உள்ள கபசுரகுடிநீர், பிரமானந்த பைரவாவை வீழ்த்த உலகத்தில் வேறு மருந்தே இல்லை என்று மூத்த சித்த மருத்துவர் ஜெயபிரகாஷ் நாராயணன் கூறியுள்ளார். இது குறித்து மூத்த சித்த மருத்துவர் ஜெயபிரகாஷ் நாராயணன் கூறுகையில்: கொரோனாவில் முதல் அலை, 2வது அலை, 3வது அலை என எந்த அலை வந்தாலும் கூட கவலையில்லை, சித்த மருத்துவத்தில் உள்ள கபசுரக்குடிநீர், பிரமானந்த பைரவாவை மருந்துகளை அடிக்க உலகத்திலேயே வேறு மருந்து இல்லை. ரெம்டிசிவரை விட பவர்புல்லானது கபசுரக்குடிநீர், பிரமானந்தா பைரவா. தமிழகத்தில் கொரோனா மரணம் குறைவுக்கு முக்கிய காரணமாக இந்த சித்த மருந்துகள் உள்ளன.  எனவே, மக்கள் பயப்படவே வேண்டும்.

கபசுரக் குடிநீர் காம்பிளிகன்சி பார்முலா. அதை கபசுரத்துக்கு மட்டுமே அறிமுகப்படுத்தினோம். ஆனால் ஏற்கனவே நிமோனியா நோய் வந்தவர்கள் நுரையீரல் பாதிக்கப்பட்டவர்கள் மூலம் நல்ல முடிவுகள் கிடைத்துள்ளது. கபசுரகுடிநீர் கசப்பாக இருக்கிறது என்றால், நிலவேம்பு கசாயத்தை குடிக்கலாம். அமுக்கரா சூரணம், நெல்லிக்காய் லேகியம் நல்ல முறையில் பாதுகாக்கும். அவற்றை காலை, இரவு என இரண்டு வேளை பாலில் அரை தேக்கரண்டியும், நெல்லிக்காய் லேகியம் அரை தேக்கரண்டி சாப்பிட்டால் நல்லது. மற்ற கட்டுப்பாடுகளையும் பின்பற்ற வேண்டும்.

கூட்டம் அதிகம் உள்ள இடங்களில் கார்பன்டை ஆக்சைடு அதிகமாக இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது, எளிதில் நோய் தொற்றும். திருமண நிகழ்ச்சிகளுக்கு 50-100 பேர் வரை அனுமதி அளித்துள்ளனர். அந்த திருமண நிகழ்ச்சியில் கண்டிப்பாக கபசுரகுடிநீர் வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தினாலே போதும். கொரோனாவை கட்டுப்படுத்தலாம். மக்களுக்கு பயம் உள்ளதா தாராளமாக தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் அதனால் கூடுதல் பலன் இருக்கிறது, இருந்தாலும் நம்முடைய இயற்கை உணவு முறை, உப்புகளை குறைத்துக் கொள்வது, இனிப்பு அதிகம் சாப்பிடாமல் இருப்பது நல்லது. ஆனால் காய்கறி, பழங்களை அதிகம் சாப்பிட வேண்டும்.

தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் 48 மணி நேரத்திற்கு வேறு மருந்துகள் எடுக்க வேண்டும் என்று மருத்துவர்களை அறிவுறுத்தியுள்ளனர். அதனால் கபசுரகுடிநீர் போன்ற சித்த மருந்துகளையும் சாப்பிட வேண்டாம். குழந்தைகளுக்கு கொரோனா தொற்று வந்தால் கூட அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக தான் இருக்கும். அதனால் அவர்களை பாதுகாப்பது சுலபம் தான், குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் மருத்துவர்களை அணுகி தான் கபசுரகுடிநீர் போன்ற மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும். மக்களிடம் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி விட்டு, உணவு பழக்கங்களை கடைப்பிடித்தால் போதும் தமிழகத்தில் கண்டிப்பாக தொற்றை ஒழித்து விடலாம். மேலும் அனைவரும் மருந்துகளை எடுக்கும் போது அனுபவம் உள்ள சித்த மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்று தான் சாப்பிட வேண்டும். மக்களிடம் கபசுரகுடிநீர் குறித்து போதிய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது என்றார்.

* தயாரிப்பது எப்படி?

ஒரு டம்ளர் நீரில் 5-10 கிராம் அளவு கபசுரக் குடிநீர் கசாய பொடியை போட்டு நன்றாக கொதிக்க வைத்து அரை டம்ளராக ஆகும் வரை காய்ச்சி இறக்கி வடிகட்டி கால் டம்ளர் குடித்து வரவும். மூக்கு, தொண்டை, சுவாசப்பாதையில் வரும் தொற்றுகளை நீக்கும் வல்லமை கொண்டது. இந்த கபசுரக்குடிநீர். குறிப்பாக மூச்சுவிடுவதில் இருக்கும் சிரமத்தை குறைக்க உதவுகிறது.

* கபசுரகுடிநீரில் இருப்பது என்ன?

சுக்கு, திப்பிலி, இலவங்கம், சிறுகாஞ்சேரி வேர், அக்ரகாரம், முள்ளி வேர், ஆடாதோடை இலை, கற்பூரவள்ளி இலை, கோஷ்டம், சீந்தில் தண்டு, சிறுதேக்கு, நிலவேம்பு சமூலம், வட்ட திருப்பி வேர், கோரைக்கிழங்கு, கடுக்காய்த்தோல் என 15க்கும் மேற்பட்ட மூலிகை பொருள்கள் சேர்க்கப்படுகிறது.

Related Stories: