மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு: லாக்-டவுனால் யாருக்கு பயன்?: மாஜி முதல்வர் குமாரசாமி கேள்வி

பெங்களூரு: மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நேரத்தில் இரவு ஊரடங்கு, லாக்டவுன் அமல்படுத்துவதால் யாருக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று முன்னாள் முதல்வர் எச்.டி.குமாரசாமி கேள்வி எழுப்பியுள்ளார். பெங்களூருவில் இது தொடர்பாக எச்.டி.குமாரசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது, மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நேரத்தில் மாநில அரசு பொறுப்புடன் நடந்துக்கொள்ள வேண்டும். பொதுமக்கள் அதிகமாக சேரும் இடத்தில் சமூக இடைவெளி எங்குவுள்ளது என்று கேள்வி எழுப்பினார். அதே போல் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. ஆனால் மருத்துவமனைகளில் படுக்கைகள் கிடைக்கவில்லை. படுக்கைகளுக்காக பரிந்துரை செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இத்துடன் கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஊசி கூட குறைவாகயுள்ளது.

நிபுணர்களின் அறிக்கையின்படி பெங்களூருவில் 15-20 ஆயிரம் கொரோனா தொற்று உறுதி ஏற்பட வாய்ப்புள்ளது என்று தெரியவந்துள்ளது. இதை கவனத்தில் வைத்து மாநில அரசு பொறுப்புடன் நடந்துக்கொள்ள வேண்டும். மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நேரத்தில் இரவு ஊரடங்கு, லாக்டவுன் அமல்படுத்துவதால் யாருக்கு பயனுள்ளதாக இருக்கும். சட்டரீதியாக, போக்குவரத்து தொழிலாளர்களை மிரட்டுவதன் மூலம் பிரச்னைக்கு தீர்வு ஏற்படாது. பலவிதமான மானியத்தில் பஸ்களை போக்குவரத்து கழகங்கள் கொடுத்து வருகிறது. அவர்களுக்கு வழங்க வேண்டிய பணத்தை அரசு நிலுவையில் வைத்துள்ளதால் நஷ்டத்தை அனுபவிக்க வேண்டியுள்ளது.

கட்சியை விட்டு செல்பவர்கள் மஜதவில் அவர்களுக்கு என்ன அநியாயம் நடந்தது என்பதை தெரிவிக்க வேண்டும். கட்சியை விட்டு செல்பவர்கள் குறித்து மக்களே முடிவு எடுக்க வேண்டும்.  ராம்நகர் மாவட்டத்துக்கு எந்த துரோகமும் செய்யவில்லை. மக்களுக்கு தேவையான வளர்ச்சி பணிகள் செய்து கொடுக்கப்படும். சென்னபட்ணா நகரசபை தேர்தலின் போது நான் செய்துள்ள வளர்ச்சி பணிகளை முன்வைத்து மக்களின் மனநிலையை மாற்ற முயற்சி மேற்கொள்ளப்படும். கட்சியில் எந்த குழப்பம் ஏற்பட்டாலும் அதை சரி செய்யப்படும். அதே போல் ஏப்ரல் 17-ம் தேதிக்கு பின்னர் ராம்நகர், சென்னபட்ணா நகரில் கட்சியை பலப்படுத்த முக்கியத்துவம் கொடுக்கப்படும்’’ என்றார்.

Related Stories: