ரெம்டெசிவிர் மருந்து கூடுதல் விலைக்கு விற்பனை: கடைக்கு அதிகாரிகள் சீல் வைப்பு

ஜபால்பூர்: கொரோனா சிகிச்சைக்கான ரெம்டெசிவர் மருந்தை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்த மருந்து நோய் தீவிரம் அதிகம் உள்ளவர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. இதன் காரணமாக இந்த மருந்தின் தேவை அதிகரித்துள்ளது. இந்நிலையில் மத்தியப்பிரதேசத்தில் மருந்து கடைகளில் ரெம்டெசிவிர் மருந்தானது அதிகபட்ச சில்லரை விலையை காட்டிலும் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக உணவு கட்டுப்பாடு ஆய்வாளருக்கு புகார் கிடைத்தது. இதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட கடைக்கு நேற்று முன்தினம்இரவு அதிகாரிகள் சென்று விசாரணை நடத்தினார்கள். இதில் ரெம்டெசிவிர் மருந்து பாட்டில் ₹18000க்கு விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து அதிகாரிகள் சம்பந்தப்பட்ட மருந்து கடைக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர்.

Related Stories: